எப்-15 ஈகிள்

எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது.[3][4] இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15இ ஸ்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.

எப்-15 ஈகிள்
எப்-15 ஈகிள் ஏஐஎம்-7 ஸ்பரோ ஏவுகணையினைச் செலுத்துகிறது
வகை தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் மக்டொனல்‍-டக்லஸ(பின்பு போயிங்)
முதல் பயணம் 27 ஜூலை 1972
அறிமுகம் 9 ஜனவரி 1976
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கா
இஸ்ரவேல், சவூதி அரேபியா, Japan
தயாரிப்பு எண்ணிக்கை F-15A/B/C/D/J/DJ: 1,198[1]
அலகு செலவு F-15A/B: US$28 million (1998)
F-15C/D: US$30 million (1998)[2]
Variants எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
எப்-15 STOL/MTD
எப்-15SE Silent Eagle]]
Mitsubishi F-15J

வகைகள்

  • F-15ஏ
தனி ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய வான் தக்குதல் விமானம். 1972-1979 வரை 384 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15பி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1972-1979 வரை 61 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
  • F-15சீ
தனி ஓட்டுனருடன் கூடிய அனைத்து வானிலைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வான் தாக்குதல் விமானம். 1979-1985 வரை 483 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15டி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1979-1985 வரை 92 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

குறிப்புகள்

  1. Davies and Dildy 2007, p. 249
  2. Davies and Dildy 2007, inside cover.
  3. Spick 2000, p. 127.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.