ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்

ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic surgery) என்பது மனித உடலின் பாகங்களை மறுசீரமைப்பு, புனரமைப்பு, மாற்றங்கள் செய்வதனைக் குறிக்கும். இது ஒப்பனை அல்லது அழகியல் அறுவை சிகிச்சை, புனரமைப்பு அறுவை சிகிச்சை, குருதி வடிச்சு அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை, நுண்ணுயிரியல் மற்றும் எரிகாய சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.[1]

சொற்பிறப்பியல்

இது கிரேக்க மொழிச்சொல்லான πλαστική (τέχνη), plastikē (tekhnē), என்பதிலிருந்து வந்தது. இதற்கு அழகியல் கலை என்பது பொருளாகும்.[2]. இது 1598 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உறுதிசெய்யப்பட்டது.[3] "பிளாஸ்டிக்" என்ற அறுவைசிகிச்சை வரைவிலக்கணம் முதன்முதலாக 1839 ஆம் ஆண்டில் தோன்றியது, இந்த வார்த்தை 1909 இல் லியோ பாக்கெலாண்டால் உருவாக்கப்பட்டது.[4]

வரலாறு

ரோம அறிஞர் ஆலஸ் கொர்னேலியஸ் செல்சஸ்
எட்வின் ஸ்மித் பாபிரியசின் குறிப்புகள் vi & vii, அமெரிக்க மருத்துவ குழுமம்.[5]
சுசிருதாவின் சிலை

முறிந்த மூக்கிற்கான நெகிழி அறுவை சிகிச்சைகள் தான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. இதனை செய்தவர் எட்வின் ஸ்மித் பாபிரியஸ் என்பவராவார்.[6]. அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான ஆதாரம் பண்டைய எகிப்திய நூலில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 3000 முதல் 2500 கிமு வரை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் உள்ளதாக கூறப்படுகிறது.[7] கி.மு 800 -ல் இந்தியாவில் புனரமைப்பு அறுவை சிகிச்சை நுட்பங்கள் நடத்தப்பட்டன.[8] சுசிருதா 6 ஆம் நூற்றாண்டில் பிளாஸ்டிக் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை துறையில் முக்கிய பங்களிப்பு செய்த ஒரு மருத்துவர் ஆவார்.[9]

கிபி முதல் நூற்றாண்டில் ரோம அறிஞர் ஆலஸ் கொர்னேலியஸ் செல்சஸ் சில வியக்கத்தக்க துல்லியமான உடற்கூறியல் விளக்கங்களை விட்டுச்சென்றார் - உதாரணமாக அவை பிறப்புறுப்பு மற்றும் எலும்புக்கூடு குறித்த அவரது ஆய்வுகளாகும். இவர் ஒட்டுறுப்பு சிகிச்சை உட்பட்ட பல அறுவைசிகிச்சை நுட்பங்களைப் பதிவுசெய்துள்ளார்.

நவீன உத்திகளின் முன்னேற்றங்கள்

1917 இல் போரில் காயமடைந்த வீரர் வால்டர் இயோவின் முகம் - மருத்துவர் ஹரால்ட் கில்லீசின் ஒட்டுறுப்பு சிகிச்சைக்கு முன்னும் (இடது) பின்னும், பின்பு (வலது).

பொதுவாக நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தையாக சர் ஹரால்ட் கில்லீஸ் என்று கருதப்படுகிறார். இவர் லண்டனில் பணிபுரியும் ஒரு நியூசிலாந்து செவிமடலியல் மருத்துவர் ஆவார். இவர் முதல் உலகப் போரின் போது முகக் காயத்தால் துன்பப்பட்ட வீரர்களுக்கு நவீன முக அறுவை செய்தார்.[10].

ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை சந்திப்பு - 2017

ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர்களின் சந்திப்பு அக்டோபர் மாதம் 6-10 ம் நாள் வரை ஓர்லாண்டா நகரில் நடைபெறுகிறது. இதில் அழகுகலை அறுவைசிகிச்சையின் முன்னேற்றம் பற்றியும்,அறுவை சிகிச்சையின் வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படுகிறது.[11]

துணை-சிறப்பு சிகிச்சைகள்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது ஒரு பரந்த பகுதியாகும். அது பின்வருமாறு பிரிக்கப்படலாம். அமெரிக்காவில், ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை நிபுணர்கள் அமெரிக்க பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை வாரியத்தால் சான்றளிக்கப்பட்டிருக்கின்றனர்.[12]

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் துணைப்பிரிவுகள் பின்வருமாறு:

அழகியல் அறுவை சிகிச்சை

அழகியல் அறுவை சிகிச்சை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு அவசியமான ஒரு அங்கமாகும். இதில் முகம் மற்றும் உடல் அழகியல் அறுவை சிகிச்சை ஆகியவையும் அடங்கும். இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளும் முன்பு அறுவை சிகிச்சை கொள்கைகளை அறுவை சிகிச்சை செய்பவர் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்.[13]

தீப்புண் அறுவை சிகிச்சை

இந்த வகையான அறுவை சிகிச்சை என்பது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலாவது தீக்காயம் ஏற்பட்ட இடத்திலேயே உடனடியாக சிகிச்சை செய்வது. மற்றொன்று,மீளாக்க அறுவைசிகிச்சை என்பது காயம்பட்ட இடத்தில் தசைகளை வைப்பது.

மண்டை-முக அறுவை சிகிச்சை

மண்டை-முக அறுவை சிகிச்சை (Craniofacial surgery) என்பது இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. குழந்தைகளுக்கான மண்டை-முக அறுவை சிகிச்சை
  2. வயதுவந்தவர்களுக்கான மண்டை-முக அறுவை சிகிச்சை

குழந்தைகளுக்கான மண்டை-முக அறுவை சிகிச்சை என்பது பெரும்பாலும் குழந்தைகளின் பிறப்பிலேயே ஏற்படும் குறைகளுக்கான அறுவை சிகிச்சை ஆகும். வயதுவந்தவர்களுக்கான க்ரானியோஃபேஷியல் அறுவை சிகிச்சை என்பது பெரும்பாலும் எலும்பு முறிவிற்காக செய்யப்படுவது ஆகும்.

நுண் அறுவை சிகிச்சை

நுண் அறுவைசிகிச்சை (Microsurgery) என்பது பொதுவாக திசுக்களைத் தேவைப்படும் உடலின் மற்றொரு இடத்திற்கு மாற்றி இரத்தக் குழாய்களை மீண்டும் இணைப்பது ஆகும். மார்பக மறுசீரமைப்பு, தலை மற்றும் கழுத்து புனரமைப்பு, கை அறுவைச் சிகிச்சை / மாற்றீடு, மற்றும் மூச்சிரைப்பு பின்னல் அறுவை சிகிச்சை ஆகியவை இந்த வகைகளில் செய்யப்படும் பெரும்பான்மையான அறுவை சிகிச்சை ஆகும்.

குழந்தைகளுக்கான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை

வயது வந்தவர்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையை விட இது முற்றிலும் மாறுபாடானது. குழந்தைகளின் பிறப்பிலேயே காணப்படும் நோய்த்தாக்கம், குறைபாடுகளைக் களைவது எளிது என அறுவை சிகிச்சை நிபுணர்களால் கருதப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையளிக்கப்படுவது க்ரானியோஃபேஷியல் முரண்பாடுகள், கூட்டுவிரல் [14] (Syndactyly), பல்விரல் (Polydactyly - அதிக விரல்களுடன் பிறப்பது), உதட்டுப்பிளவு மற்றும் மேலண்ணம் மற்றும் பிறவியிலேயே கைமாறி இருப்பது ஆகியவை அடங்கும்.

நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள்

தோல்திசு மாற்றம் என்பது அறுவை சிகிச்சைகளில் செய்யப்படும் பொதுவான ஒன்றாகும். திசுக்களைப் பெறுநரிடமிருந்தும், நன்கொடையாளர்களிடமிருந்தும் பெறலாம்.

  • ”தன் ஒட்டு” - திசுக்கள் அந்தந்த நபர்களிடமிருந்தே பெறப்படுகிறது. இயல்பான திசுக்கள் இல்லாமலோ அல்லது குறைந்தளவிலோ இருந்தால், செயற்கையாக உருவாக்கப்பட்டவை பயன்படுத்தப்படும்.
  • ”ஓரினத் திசு ஒட்டு” -தேவையான திசுக்கள் ஒரே இனத்தை சேர்ந்த நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.
  • ”அயலினத் திசு ஒட்டு” - வேறுபட்ட இனங்களான நன்கொடையாளடமிருந்து எடுக்கப்படுகின்றன.

வழக்கமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளிலிருந்து கவனமாக திட்டமிடப்பட்டிருக்கும். எனவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலிருந்து நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

புனரமைப்பு அறுவை சிகிச்சை

US Navy 080811-N-9689V-004 Operation Smile volunteers Dr. Robert Russell, a plastic surgeon from Springfield, Ill., and his assistant Maria Velasquez, perform reconstructive surgery on 21-year-old Solomon Maitava

தீக்காயங்களால் ஏற்படும் செயல்பாட்டு குறைபாடுகளை சரிசெய்வதற்கு புனரமைப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள் போன்ற அபாயகரமான காயங்கள் அல்லது கூர்மையான உதடுகள் போன்ற பிறவிக்குரிய குறைகள், அசாதாரண வளர்ச்சித் தொற்று மற்றும் நோய், புற்றுநோய் அல்லது கட்டிகள் போன்றவைதான் பெரும்பாலும் செய்யப்படுபவை ஆகும்.

ஒப்பனை அறுவை சிகிச்சை வழிமுறைகள்

Mastectomie 02

ஒப்பனை அறுவை சிகிச்சை என்பது ஒரு நபருடைய தோற்றம் அல்லது வயதான அறிகுறிகளை நீக்குவதையே ஒரே நோக்கமாகக்கொண்டு நிகழக்கூடிய ஒரு விருப்பமான செயல்முறை ஆகும். அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 16 மில்லியன் ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன.[15] அமெரிக்காவில் நிகழ்த்தப்படும் ஒப்பனை நடைமுறைகள் எண்ணிக்கை நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் 88% இலிருந்து 2014 ஆம் ஆண்டில் பெண்கள் மீது 92% ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன.[16] 2007 ஆம் ஆண்டில் சுமார் 12 மில்லியன் ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன.

மிகவும் பிரபலமான அழகியல் / ஒப்பனை செயல்முறைகள் பின்வருமாறு:

  1. அடிவயிற்றுக் குறைப்பு: அடிவயிற்றை மாற்றியமைத்தல் மற்றும் இறுக்குதல்
  2. கண்ணிமை அறுவை சிகிச்சை: கண் இமைகளின் வடிவ மாற்றமைப்பு
  3. ஆண்குறி அறுவை சிகிச்சை  : ஆண்குறியின் கட்டுமானம் அல்லது புனரமைப்பு
  4. மார்பகப் பெருக்குதல்கள்  :கொழுப்பு ஒட்டுண்ணி, உப்பு அல்லது சிலிகோன் ஜெல் ப்ரெஸ்டெடிக்ஸ் மூலம் மார்பகங்களின் பெருக்கம்
  5. மார்பக குறைப்பு  : தோல் மற்றும் சுரப்பி திசுக்களை அகற்றுவது, தோள் மற்றும் முதுகு வலியை குறைப்பதற்காக இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் செய்வது.
  6. மார்பக மாற்றம் : குழந்தை பிறப்பிற்கு பின்பு எடைஇழப்பிற்காக செய்யப்படுவது.. இது சுரப்பியின் திசுவை எதிர்க்கும் மார்பகத்தை அகற்றுவது ஆகும்.
  7. பிட்டம் பெருக்குதல் : சிலிகான் உள்வைப்புகள் அல்லது கொழுப்பு ஒட்டுண்ணி போன்றவற்றைப் பயன்படுத்தி பிட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து இடமாற்றம் செய்தல்.
  8. பிட்ட மாற்றம்: பிட்டத்தில் அதிகப்படியான தோல் நீக்கப்படுவதன் மூலம் தூக்குதல் மற்றும் இறுக்குவது போன்றவற்றை செய்தல்.
  9. உதடு விரிவாக்கம்: உதடுகளின் அளவை மாற்றுதல்.
  10. மூக்கு வேலை : மூக்கின் அமைப்பை மாற்றியமைத்தல்.
  11. காது அறுவை சிகிச்சை: காதுகளின் அமைப்பை மாற்றியமைத்தல்.
  12. முக மாற்றம்: சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருந்து வயதான அறிகுறிகளை நீக்குதல்.
  13. கை மாற்றம்: கைகளில் காணப்படும் அதிகப்படியான தோல் மற்றும் கொழுப்புகளை களைவது ஆகும்.[17]

முகமாற்று அறுவை சிகிச்சை, உதடு அறுவை சிகிச்சை, கண்ணிமை அறுவை சிகிச்சை, மார்பக மாற்று அறுவை சிகிச்சை, மூக்கு வேலைகள் ஆகியவை மிகவும் பிரபலமான அறுவை சிகிச்சைகள் ஆகும்.[18]

சிக்கல்களும் அபாயங்களும்

எல்லா அறுவை சிகிச்சையும் ஆபத்துகள் நிறைந்தவையே. ஒப்பனை அறுவை சிகிச்சையின் போது ஹெமாட்டோமா, நரம்பு சேதம், தொற்று, வடு, மற்றும் உறுப்பு சேதம் போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.[19][20][21][22]

உளவியல் கோளாறுகள்

ஊடகங்கள்,விளம்பரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு செய்தாலும் இவை மனநல கோளாறுகளுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.[23].சில சந்தர்ப்பங்களில் வேறு அறுவை சிகிச்சை செய்ய இயலாத/நிபுணர்கள் மறுக்கும் சூழ்நிலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது அபாயகரமானது.[24]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Plastic surgery". Aman Garg. Citelighter. பார்த்த நாள் 15 January 2013.
  2. Oxford English Dictionary, s.v. 'plastic'
  3. "plastic". Oxford University Press. பார்த்த நாள் 12 February 2015.
  4. "Plastic". Etymonline. பார்த்த நாள் 2 March 2014.
  5. "Academy Papyrus to be Exhibited at the Metropolitan Museum of Art". The New York Academy of Medicine. 2005-07-27. http://www.nyam.org/news/2493.html. Retrieved 2008-08-12.
  6. Shiffman, Melvin. Cosmetic Surgery: Art and Techniques. Springer. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-21837-8.
  7. Mazzola, Ricardo F.; Mazzola, Isabella C.. Plastic Surgery: Principles. Elsevier Health Sciences. பக். 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4557-1052-2.
  8. MSN Encarta (2008). Plastic Surgery.
  9. name=Dwivedi&Dwivedi>Dwivedi, Girish & Dwivedi, Shridhar (2007). History of Medicine: Sushruta – the Clinician – Teacher par Excellence. [[National Informatics Centre|National Informatics Centre Government of India
  10. Chambers, J; P. Ray (2009). "Achieving growth and excellence in medicine: the case history of armed conflict and modern reconstructive surgery". Annals of Plastic Surgery 63 (5): 473–478. doi:10.1097/SAP.0b013e3181bc327a. பப்மெட்:20431512.
  11. https://www.dremed.com/medical-trade-shows/?p=4867
  12. "Introduction". American Board of Plastic Surgery (2013). பார்த்த நாள் 4 April 2013.
  13. Description of Plastic Surgery American Board of Plastic Surgery
  14. "Syndactyly". WebMD LLC. பார்த்த நாள் 27 January 2017.
  15. http://www.plasticsurgery.org/Documents/news-resources/statistics/2014-statistics/plastic-surgery-statsitics-full-report.pdf
  16. "2001 Cosmetic Surgery Statistics". பார்த்த நாள் 12 September 2015.
  17. "Arm lift" - Novasans
  18. "The Most Popular Cosmetic Procedures". WebMD. பார்த்த நாள் 12 September 2015.
  19. "The 10 Most Common Plastic Surgery Complications".
  20. Choices, NHS. "Plastic surgery - Complications - NHS Choices".
  21. "Cosmetic surgery Risks - Mayo Clinic".</ref மார்பக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மருந்துகள் சிதைவு உட்பட பல சிக்கல்கள் ஏற்படலாம். மார்பக அறுவை சிகிச்சை பெற்ற 5 நோயாளிகளில் ஒருவர், 10 ஆண்டுகளுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என்று 2011 ஆம் ஆண்டில் FDA தெரிவித்தது.
  22. http://www.fda.gov/NewsEvents/Newsroom/PressAnnouncements/ucm260235.htm
  23. "Obsessed With Beauty: The Rush To Cosmetic Surgery". பார்த்த நாள் 12 September 2015.
  24. Canning, Andrea (20 July 2009). "Woman's DIY Plastic Surgery 'Nightmare'". ABC News. http://abcnews.go.com/GMA/story?id=8080723&page=1.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.