ஒசநே+04:30
யூடீசி+04:30 (UTC + 04: 30) என்பது +04: 30 இன் ஒ. ச. நே. ஈடுசெய்தலில்(UTC) இருந்து அடையாளங்காட்ட, இந்த நேரம் இதில் பயன்படுத்தப்படுகிறது:

Light colors indicate where standard time is observed all year; dark colors indicate where daylight savings is observed.
ஒசநே+04:30 | |
---|---|
![]() | |
ஒசநே ஈடு | |
UTC | UTC±00:00 |
நடப்பு நேரம் | |
07:03, 5 திசம்பர் 2019 UTC [refresh] | |
பகலொளி சேமிப்பு நேரம் (பசேநே) பின்பற்றல் | |
இவ்வலயத்தில் பசேநே முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. |

ஆண்டு முழுவதிற்குமான சீர்நேரம்
ஈரானிய நேர அளவீடு
ஈரான் நிலையான நேரம் (ஐஆர்எஸ்டி)

ஈரானிய சீர் நேரம் (Iran Standard Time=IRST) அல்லது ஈரான் நேரம் (IT) என்பது ஈரான் பின்பற்றப்படும் நேர வலயம் ஆகும். ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 03: 30 என்பதைப் பயன்படுத்துகிறது ஐ.ஆர்.எசு.டீ (IRST) கிழக்கு 52.5 டிகிரி நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது, இது ஈரானிய நாட்காட்டியை வரையறுக்கும் நெடுவரை (meridian) ஆகும். ஈரானின் அதிகாரப்பூர்வ நெடுவரையாகத் திகழ்கிறது. ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 04: 30 என்பதை, பகலொளி நேரமாகப் பின்பற்றுகிறது. இதனை ஐ.ஆர்.டி.டீ (IRDT) என்ற அஃகுப்பெயரால் குறிப்பர்.
ஈரான் நாட்டின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ (IRST) எனக் குறிப்பிடுவர். ஒ.ச.நே. +3:30 என்பது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Coordinated Universal Time-UTC) என்பதன் அஃகுப்பெயர் ஆகும். இதன்படி, அதிதுல்லிய அணுக் கடிகார நேர சீர்தரம் கணிக்கப் படுகிறது. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும், நெடு நொடிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த புவிநேரமானது, பன்னாட்டு நேரமாக, பன்னாட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[1].[2].[3] உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட, இந்த பன்னாட்டு நேரத்திலிருந்தான வேறுபாடுகள் கூட்டல் (+)குறி அல்லது கழித்தல்(-) குறியீடுகளால் அளவிடப்பட்டு, அந்தந்த நாட்டினரால் குறிக்கப்படுகிறது. மற்றொரு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் கடிகாரம் காட்டும் நேரத்தில், அந்த நாட்டுக்குரிய சீர் நேரத்தினைக் கழித்தால், பன்னாட்டு நேரத்தினை அறிய இயலும். எடுத்துக்காட்டாக, இந்திய சீர் நேரமான + 5.30 ஆகும். இந்திய மாலை நேரம் 6.30 மணி என கொண்டால், அப்பொழுது இருக்கும் உலக நேரம் நண்பகல் 1.00 மணி ஆகும். எப்படி என்றால், இந்திய மாலை நேரம் 6.30 மணி என்பது, முற்பகல்12.00+பிற்பகல்6.30 = 18.30 ஆகும். ஒரு நாளை 24 மணி நேரம் என்பதை நாம் அறிந்ததே. இந்த 18.30 என்பதில், இந்திய சீர் நேரமான +5.30 என்பதைக் கழித்தால், உலக நேரமான பிற்பகல் 1.00 என்பதை அறியலாம். அதனை 24 மணிநேரக் கணக்கீட்டின் படி (கழித்தல் கணக்கு = 18.30-05.30=13.00), 13.00 என்றும் கூறலாம். அதைப்போலவே, ஈரானின் உள்ளூர் நேரம் முற்பகல் 7.30 மணி என்றால், பன்னாட்டு நேரம் ஈரானின் அதிகாலை நான்கு மணி ஆகும். அதாவது, உள்ளூர் நேரமான 7.30 என்பதில், 3.30 என்பதனைக் கழித்தால், 4.00 மணி என்பதை கணித்து அறியலாம்.
ஈரானிய பகலொளி நேரம்

ஈரான் நாட்டின் பகலொளி நேரத்தினை, ஐ.ஆர்.டி.டீ (IRDT) எனக் குறிப்பிடுவர். மகுமூத் அகமதிநெச்சாத், ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்த போது, தனது ஆணையின் வழியே, 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரத்தினை (Iran Daylight Time or IRDT).[4][5] அந்நாட்டு மக்கள் பின்பற்றுவதைத் தடுத்தார். பின்னர், 2008 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1 ஆம் நாநள் மறுஅறிமுகம் செய்யப்பட்டது. இது ஈரானின் அரசு நாட்காட்டியான, சூரிய இச்சிரி நாட்காட்டி (Solar Hijri calendar (பாரசீகம்: گاهشماری هجری خورشیدی) கணக்கீடுகளின் படி, குறிப்பாக நவுரூஸ் எனப்படும் புத்தாண்டு அடிப்படையில் கணக்கிடப் படுகிறது.
மேற்கோள்கள்
- http://www.timeanddate.com/time/aboututc.html
- http://www.ucolick.org/~sla/leapsecs/HTMLutcdoomed.html
- http://whatis.techtarget.com/definition/Coordinated-Universal-Time-UTC-GMT-CUT
- "Iran will not observe DST". Presstv.ir (20 March 2007). பார்த்த நாள் 9 May 2010.
- "Time zone and daylight saving time for Iran – Tehran between 2010 and 2019". Timeanddate.com. பார்த்த நாள் 21 நவம்பர் 2019.
ஈரான் - ஈரான் பகலொளி நேரம் (IRDT)