ஒசநே+03:30
யூடீசி + 03: 30 (UTC + 03: 30) என்பது +03: 30 என்ற பன்னாட்டு நேர அளவீடுகளைக் குறிக்கும், ஒ. ச. நே. இலிருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2019-11-29T16:00:58 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Light colors indicate where standard time is observed all year; dark colors indicate where daylight savings is observed.
ஒசநே+03:30 | |
---|---|
![]() | |
ஒசநே ஈடு | |
UTC | UTC±00:00 |
நடப்பு நேரம் | |
07:03, 5 திசம்பர் 2019 UTC [refresh] | |
பகலொளி சேமிப்பு நேரம் (பசேநே) பின்பற்றல் | |
இவ்வலயத்தில் பசேநே முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. |

வடக்கு அரைக்கோள குளிர்காலச் சீர்நேரம்
முதன்மை நகரங்கள்: தெகுரான்
புவியின் மத்திய கிழக்குப் பகுதிகளைக் குறிக்கிறது.
ஈரானிய நேர அளவீடு
ஈரான் நிலையான நேரம் (ஐஆர்எஸ்டி)

ஈரானிய சீர் நேரம் (Iran Standard Time=IRST) அல்லது ஈரான் நேரம் (IT) என்பது ஈரான் பின்பற்றப்படும் நேர வலயம் ஆகும். ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 03: 30 என்பதைப் பயன்படுத்துகிறது ஐ.ஆர்.எசு.டீ (IRST) கிழக்கு 52.5 டிகிரி நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது, இது ஈரானிய நாட்காட்டியை வரையறுக்கும் நெடுவரை (meridian) ஆகும். ஈரானின் அதிகாரப்பூர்வ நெடுவரையாகத் திகழ்கிறது. ஈரான் அரசானது, ஒ.ச.நே. + 04: 30 என்பதை, பகலொளி நேரமாகப் பின்பற்றுகிறது. இதனை ஐ.ஆர்.டி.டீ (IRDT) என்ற அஃகுப்பெயரால் குறிப்பர்.
ஈரானிய சீர் நேரம்
ஈரான் நாட்டின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ (IRST) எனக் குறிப்பிடுவர். ஒ.ச.நே. +3:30 என்பது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Coordinated Universal Time-UTC) என்பதன் அஃகுப்பெயர் ஆகும். இதன்படி, அதிதுல்லிய அணுக் கடிகார நேர சீர்தரம் கணிக்கப் படுகிறது. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும், நெடு நொடிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த புவிநேரமானது, பன்னாட்டு நேரமாக, பன்னாட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[1].[2].[3] உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட, இந்த பன்னாட்டு நேரத்தில் இருந்தான வேறுபாடுகள் கூட்டல் (+)குறி அல்லது கழித்தல்(-) குறியீடுகளால் அளவிடப்பட்டு, அந்தந்த நாட்டினரால் குறிக்கப் படுகிறது. மற்றொரு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் கடிகாரம் காட்டும் நேரத்தில், அந்த நாட்டுக்குரிய சீர் நேரத்தினைக் கழித்தால், பன்னாட்டு நேரத்தினை அறிய இயலும். எடுத்துக்காட்டாக, இந்திய சீர் நேரமான + 5.30 ஆகும். இந்திய மாலை நேரம் 6.30 மணி என கொண்டால், அப்பொழுது இருக்கும் உலக நேரம் நண்பகல் 1.00 மணி ஆகும். எப்படி என்றால், இந்திய மாலை நேரம் 6.30 மணி என்பது, முற்பகல்12.00 + பிற்பகல் 6.30 = 18.30 ஆகும். ஒரு நாளை 24 மணி நேரம் என்பதை நாம் அறிந்ததே. இந்த 18.30 என்பதில், இந்திய சீர் நேரமான +5.30 என்பதைக் கழித்தால், உலக நேரமான பிற்பகல் 1.00 என்பதை அறியலாம். அதனை 24 மணிநேரக் கணக்கீட்டின் படி (கழித்தல் கணக்கு = 18.30 - 05.30 = 13.00), 13.00 என்றும் கூறலாம். அதைப்போலவே, ஈரானின் உள்ளூர் நேரம் முற்பகல் 7.30 மணி என்றால், பன்னாட்டு நேரம் ஈரானின் அதிகாலை நான்கு மணி ஆகும். அதாவது, உள்ளூர் நேரமான 7.30 என்பதில், 3.30 என்பதனைக் கழித்தால், 4.00 மணி என்பதை கணித்து அறியலாம்.