ஐரியக் கடல்
ஐரியக் கடல் (Irish Sea, ஐரிஷ்: Muir Éireann,[1]சுகாத்து: Erse Sea, வேல்சு: Môr Iwerddon) பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ள கடல். இது தெற்கில் செல்ட்டிக் கடலுடன் செயின்ட் ஜார்ஜின் கால்வாயாலும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வடக்குக் கால்வாயாலும் இணைக்கப்பட்டுள்ளது. இக்கடலில் உள்ள பெரிய தீவு அங்கில்சே ஆகும். அடுத்ததாக மாண் தீவு பெரியதும் வணிக முதன்மை பெற்றதுமாகும். இக்கடல், மிகவும் அரிதாக, மாண்க்சு கடல் (ஐரிஷ்: Muir Meann,[2] எனப்படுகிறது.
![]() | |
அமைவிடம் | பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே |
ஆள்கூறுகள் | 53°N 5°W |
Basin countries | ஐக்கிய இராச்சியம்; அயர்லாந்து குடியரசு |
தீவுகள் | அங்கில்சேயும் ஹோலி தீவும், மாண் தீவு, வால்னே தீவு, லாம்பே தீவு, ஐரிய விழி |
இக்கடல் வணிக மற்றும் பொருளியல் முதன்மை பெற்றது; மண்டல வணிகம், கப்பற் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மரபுவழித் தொழில்களாகும். அண்மையில் காற்றுத் திறன் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் மின்னாற்றல் தயாரிக்க ப்படுகிறது. பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையேயான ஆண்டு போக்குவரத்து 12 மில்லியன் பயணியராகவும் 17 மில்லியன் டன் வணிகச் சரக்குகளாகவும் விளங்குகிறது.