ஐன்ரிக் ஏர்ட்சு
ஐன்ரிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு (ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ், Heinrich Rudolf Hertz, பெப்ரவரி 22, 1857 – சனவரி 1, 1894) ஓர் செருமானிய இயற்பியலாளர் ஆவார். மாக்ஸ்வெல்லின் ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார். வானொலி அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து மின்காந்த அலைகளின் இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவார். மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1] ஒரு ஏர்ட்சு (குறியீடு:Hz) என்பது காலமுறை நிகழ்வொன்றில் ஓர் வினாடிக்கு ஒரு சுழற்சி ஆகும்.
ஐன்றிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு Heinrich Rudolf Hertz | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 22, 1857 ஹாம்பெர்க், செருமனி |
இறப்பு | சனவரி 1, 1894 36) பான், செருமனி | (அகவை
வாழிடம் | செருமனி |
தேசியம் | செருமானியர் |
துறை | இயற்பியல் இலத்திரனியல் பொறியியல் |
பணியிடங்கள் | கீல் பல்கலைக்கழகம் கார்ல்சுருகே பல்கலைக்கழகம் பான் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மூனிக் பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஏர்மாண் வோன் எல்ம்ஹோல்ட்ஸ் |
அறியப்படுவது | மின்காந்த அலைகள் ஒளிமின் விளைவு |
கையொப்பம் ![]() |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.