ஏஷியன் எஜுகேஷனல் சேர்விசஸ்

ஏசியன் எஜுகேசனல் சேர்விசஸ் (Asian Educational Services, AES ஆசிய கல்விச் சேவைகள்) என்பது, பெரும்பாலும் வரலாற்றுப் பெறுமானம் கொண்ட பழைய நூல்களை, மறுபதிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பதிப்பகம் ஆகும். 1973 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந் நிறுவனத்தின் தலைமை நிலையம் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் அமைந்துள்ளது. சென்னையிலும் இதன் கிளை நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது.

ஏசியன் எச்சுகேசனல் சர்விசசு
Asian Educational Services (AES)
வகைவரலாற்றுப் பெருமை கொணட நூல்களை மறுபதிப்புச் செய்யும் பதிப்பகம்
நிறுவுகை1973
நிறுவனர்(கள்)ஜகதிசு லால் செட்லி
தலைமையகம்புது தில்லி (இந்தியா)
சேவை வழங்கும் பகுதிஉலகளாவியது
முக்கிய நபர்கள்கௌதம் செட்லி
தொழில்துறைநூல் அமைப்பு, பதிப்பகம்
உற்பத்திகள்நூல் அமைப்பு
பணியாளர்37
இணையத்தளம்www.asianeds.com

இந் நிறுவனத்தால் வெளியிடப்படும் நூல்கள் பெரும்பாலும், 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை அச்சிடப்பட்ட மிகப் பழைய நூல்கள் ஆதலால், பதிப்புரிமை காலாவதியானவை ஆகும்.

நாடுகள்

இதன் பெயருக்கு ஏற்ப ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாடுகள் தொடர்பான நூல்கள் இந் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், மியன்மார், அரேபியா, ஈரான், மத்திய ஆசியா, மங்கோலியா, ஆப்கனிஸ்தான், கம்போடியா, சைபீரியா, நேபாளம், பூட்டான் போன்றவை அடங்கும். இந்தியா, இலங்கை போன்றவற்றின் வரலாறுகள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

துறைகள்

இப் பதிப்பகத்திலிருந்து வெளியாகும் நூல்கள் பல துறைகளையும் சார்ந்தவையாக உள்ளன. குறிப்பாக, வரலாறு, கலை, கட்டிடக்கலை, சமயம், மானிடவியல், நாட்டாரியல், பழங்கதையியல், நாணயவியல், விளையாட்டு போன்ற துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சமயத்துறையில், இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், ஜைனம், பார்சி சமயம் போன்ற சமயங்கள் தொடர்பான நூல்கள் மறுபதிப்புக் கண்டுள்ளன.

நூலாசிரியர்கள்

இந் நிறுவனத்தின் மூலம் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூல்களிற் பல கீழைத்தேச ஆய்வுகளில் புகழ் பெற்ற நூலாசிரியர்களால் எழுதப்பட்டவை. இவர்களுள் மாக்ஸ் முல்லர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஆர். சி. சில்டேர்ஸ், மோனியர்-வில்லியம்ஸ், ஈ. டப்ளியூ. லேன், டப்ளியூ. கீகர், வின்சென்ட் சிமித், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற பலர் அடங்குகின்றனர்.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.