ஏமாளிகள்

ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.

ஏமாளிகள்
இயக்கம்எஸ். இராமநாதன்
தயாரிப்புஏ. எல். எம். மவுஜூட்
கதைஎஸ். ராம்தாஸ்
இசைகண்ணன் - நேசம்
நடிப்புஎன். சிவராம்
ஹெலன்குமாரி
ராஜலட்சுமி
ரி. ராஜகோபால்
எஸ். செல்வசேகரன்
கே. ஏ. ஜவாஹர்
டொன் பொஸ்கோ
செல்வம் பெர்னாண்டோ
எஸ். ஜேசுரட்ணம்
இரா பத்மநாதன்
மணிமேகலை
ஒளிப்பதிவுஜே. ஜே. யோகராஜா
படத்தொகுப்புஎஸ். இராமநாதன்
விநியோகம்பாக்கீர் பிலிம்ஸ்
வெளியீடு1978
நாடுஇலங்கை
மொழிதமிழ்

என். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.

குறிப்பு

  • எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான "கொமடியன்ஸ்" மூலமாக பலமுறை மேடையேற்றிய "காதல் ஜாக்கிரதை" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் "ஏமாளிகள்".
  • ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய " வான் நிலவு தோரணம்" என்ற பாடல் பிரபலம் பெற்றது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.