எழுத்தாணி

பழங்காலத்தில் பனையோலைகளில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது. கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியை சங்க இலக்கியங்களும் சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் எழுத்தாணி என்கிற சொல்லாட்சியை முதன் முதலாக ஏலாதி தான் குறிப்பிடுகிறது. அதைக் கீழ்கண்ட பாடல் மூலம் அறிய முடியும்.

ஊணோடு கூறை யெழுத்தாணி புத்தகம்
பேணோடு மெண்ணும் மெழுத்திவை- மாணோடு
கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (ஏலாதி-63)
எழுத்தாணி

வகைகள்

மடக்கெழுத்தாணி

எழுத்தாணி பலவகைப்படும். அவை அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி,[1] கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி மற்றும் தேரெழுத்தாணி.

மேற்கோள்

  1. மணி.மாறன் (22 சனவரி 2018). "ஓலைச்சுவடிகளின் காலம்". தினமலர். பார்த்த நாள் 9 சனவரி 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.