எருமை (அரசன்)
சங்கப்பாடல்களில் எருமை என்னும் பெயர் கொண்டவர் மூவர் காட்டப்படுகின்றனர்.
ஒருவன் வடக்கில் அயிரியாறு பாயும் எருமை நன்னாட்டை ஆண்டுவந்தான். இந்த எருமை அரசன் வடுகர் பெருமகன் என்று போற்றப்படுகிறான். இவனது நாடு தமிழர் பொருள்தேடச் சென்ற வடநாடு. இந்த எருமை என்னும் மன்னன் காட்டு ஆவினங்களைக் கவர்ந்துவந்து தன் மன்றத்தில் கட்டினான். [1]
மற்றொருவன் நீலமலை தொட்டபெட்டா அரசன். இந்த அரசன் குடநாட்டு அரசன். இவன் நுண்பூண் எருமை எனப் போற்றப்படுகிறான். [2] எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான். [3] இந்த உவமை இவன் தொட்டபெட்டா நீலமலை அரசன் என்பதைத் தெளிவாக்குகிறது.
இன்னொருவன் புராணக்கதையில் திருமாலால் கொல்லப்பட்டவன். பசுங்கட் கடவுள் எருமை எருமை என்பவனின் நெஞ்சைப் பிளந்தது போல் வண்டு நிறம் கொண்ட காளை தன்னை அடக்கவந்த பொதுவனைச் சாக்குத்தியது [4] காரிக் காளையை அடக்கி அதன்மேல் ஊர்ந்தவன் எருமை என்பானின் நெஞ்சில் ஏறி வேலால் குத்திய திருமாலைப் போல் இருந்தது [5]
எருமையூரன் என்பவன் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோற்றோடிய எழுவரில் ஒருவன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைத் தாக்கித் தோற்றோடியவன்.
அடிக்குறிப்பு
- வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253
- “நன்பூண் எருமை குடநாட்டு அன்ன என் ஆய்நலம்” - மாமூலனார் அகம் 115
- நல்லந்துவனார் பரிபாடல் 8-86
- நல்லுருத்திரன் கலித்தொகை 101-25
- நல்லுருத்திரன் கலித்தொகை 103-43