தோட்டி
தோட்டி என்பது தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு சாதியாகும். இவர்கள் கழிவுகளை அகற்றும் தொழிலைச் செய்து வந்துள்ளனர். "மத வழிபாட்டுத் தளங்களைவிட பொதுக் கழிவறைகள் புனிதமானவை ஏனென்றால் அங்கே தான் இனம், மதம், சாதி பார்க்காது எல்லோருடைய அழுக்குகளும் களையப்பட்டு, ஏற்கப்பட்டு அழுத்தத்தில் மீண்டு உடல் சுத்தமாவது கிடைக்கிறது. அதையும் தூய்மைப்படுத்தி அங்கு வருவோர் எல்லோரையும் சமமாக பார்த்தும் தோட்டி என்று இழிபெயரால் பலரால் அழைக்கப்படுபவனே கடவுள்." [1] என்று உயர்த்திச் சொல்லுமளவிற்கு மிகவும் கீழான பணிகளைச் செய்து வந்திருக்கும் இச்சமூகத்தினர் இன்னும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர்.
இலக்கியப் பதிவுகள்
- சுவாமி விவேகானந்தர் இவர்கள் படித்த சமுதாயத்தினரால் தாழ்வாகப் பார்க்கப்பட்ட நிலையைக் கண்டித்துள்ளார்.
’உங்களைப்போல் அவர்களால் சில புத்தகங்களைப் படிக்க முடியாமல் இருக்கலாம்;சூட்டும் கோட்டும் போடுகின்ற உங்கள் "உடை நாகரீகம்" அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? எல்லா நாடுகளிலும் அவர்களே சமுதாயத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இந்தக் கீழ்நிலை மக்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் நீங்கள் உணவையும் உடையையும் எங்கிருந்து பெறுவீர்கள்? கல்கத்தாவில் உள்ள தோட்டிகள் ஒரு நாளைக்கு வேலை நிறுத்தம் செய்தால் சர்வ குழப்பம் ஆகி விடாதா? மூன்று நாட்கள் வேலையை நிறுத்திவிட்டாலோ தொற்று நோய்களால் நகரமே காலியாகிவிடும். தொழிலாளிகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டால் உங்களுக்கு உணவும் உடையும் வருவது நின்றுவிடும். இதில்,அவர்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் உங்களைப் படித்தவர்கள் என்றும் கூறித் திரிகிறீர்கள்! ’[2]
- பிரபல மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை தமது ’தோட்டியின் மக’(1947) என்ற நாவலில் தென் இந்தியாவில் ஆலப்புழையில் அந்நாளில் இவர்களது நிலைமையை பதிவு செய்திருக்கிறார்.
மேற்கோள்கள்
- வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ? செய்தி
- எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு; ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை: ஞானதீபம் சுடர் 6, பக்கம் 126