எம்டன் (இடாய்ச்சுலாந்து)

எம்டன் (Emden) இடாய்ச்சுலாந்தின் வடமேற்காக அமைந்துள்ள துறைமுக நகரம். 2006 முதல் கிழக்கு பிரழ்சியா வின் முக்கிய நகரமாயிற்று, இதன் மொத்த மக்கட்தொகை 51,692 ஆகும். இந்நகரம் நிறுவப்பட்ட ஆண்டுகள் சரியாக கணிக்கமுடியவில்லை. 8 வது நூற்றாண்டுகளில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பழமைப் பெயர்களாக அமுதான், எம்டா, எம்டன் என்றுக் கூறப்படுகிறது. 1495 ல் முதலாம் மாக்சுமிலன் காலத்தில் இது நகர ஏற்புப்பெற்றது.

எம்டன் (இடாய்ச்சுலாந்து)
சின்னம் அமைவிடம்
எம்டன் (இடாய்ச்சுலாந்து) இன் சின்னம்
செயலாட்சி (நிருவாகம்)
நாடு இடாய்ச்சுலாந்து
மாநிலம்Invalid state: "நெய்டர்சாக்சென்"
மாவட்டம்கிரெயசுப்பிரெய் இசுட்டாட்
ஒபர்பர்கர்மைசுட்டர்ஆல்வின் பிரிங்க்மன் (SPD)
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு112.33 ச.கி.மீ (43.4 ச.மை)
ஏற்றம்1 m  (3 ft)
மக்கட்தொகை 51,692  (30 சூன் 2006)
 - அடர்த்தி460 /km² (1,192 /sq mi)
வேறு தகவல்கள்
நேர வலயம் ஒஅநே+1/ஒஅநே+2
வாகன அனுமதி இலக்கம்EMD
அஞ்சல் குறியீடுs26721, 26723, 26725
Area codes04921, 04927 (Knock)

17 ம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்களின் குடியேற்றத்தால் இது மிகவும் செல்வ செழிப்புமிக்க நாகரமாக விளங்கியது. அப்போது புராட்டசுத்தாந்து மதம் பரவியிருந்ததோடு விவிலியத்தின் முதல் டச்சு மொழியாக்கம் வெளியிடப்பட்டது. பிரான்சிய நெப்போலியன் காலத்தில் கிழக்கு பிரழ்சியா அதனை சுற்றியுள்ள நகரங்கள் ஒல்லாந்து இராச்சியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. 1870 களில் இந்நகரில் தொழிற்புரட்சிகள் ஏற்பட்டன.

19 நூற்றாண்டுகளில் மிகப்பெரியக் கால்வாய்த்திட்டமான டார்ட்மன்ட் எம்சு கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது எம்டன் மற்றும் ரக்ர் பகுதிகளை இணைத்தன. இதனால் 1970 வரை எம்டன் துறைமுக நகரமாக இருக்கக் காரணமாயிற்று. 1903 ஆம் தொடங்கப்பட்ட கப்பல் கட்டும் துறைமுகம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இதன் முக்கிய அழகிய எழில் மிக்க கட்டடங்கள் இரண்டாம் உலகப்போரின் தாக்குதலால் முற்றிலும் அழிந்தன. மிகவும் மோசமானத் தாக்குதல் செப்டம்பர் 6, 1944 அன்று நடந்தது. 80 விழுக்காடு வீடுகளும் நகர சொத்துக்களும் அழிந்தன. ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நகரம் செப்டம்பர் 6, 1962, ல் மீண்டும் செப்பனிடப்பட்டது.

இந்நகரின் முக்கியத் தொழில்களாக கப்பல் கட்டும் தொழிலும், மோட்டார் வண்டிகள் தயாரிப்புகளும் இருக்கின்றன. 1973 ல் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு தற்பொழுது 3500 மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வியறிவு பெறுகின்றனர்.

முக்கிய விளையாட்டு கால்பந்தாட்டம். நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபாடுகொண்டுள்ளனர். இங்கு பல கால்பந்தாட்டக் குழுக்கள் உள்ளன. நிறைய பேர் கால்பந்தாட்ட விளையாட்டை ரசிக்கின்றனர். ஒரேநேரத்தில் 12000 பேர் கண்டு களிக்கும் அளவுக்கு இங்கு அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவும் செய்யப்படுகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.