என்லைற்

வின்டோஸ் இயங்குதளங்களான விண்டோஸ் 2000, எக்ஸ்பி, 2003 இயங்குதளங்களின் நிறுவல்களை விரும்பியவாறு மேற்கொள்வதற்கு என்லைற் (அலல்து என்லைட்) மற்றும் மற்றும் விஸ்டா இயங்குதளங்களின் நிறுவல்களை விரும்பியவாறு மேற்கொள்வதற்கு விலைற் (அல்லது விலைட்) ஆகியன இலவச மென்பொருட்கள் உதவுகின்றன.

என்லைற்

nLite Wizard
உருவாக்குனர் டினோ நுஹஜிக் (நுகி என்றும் அறியப்படுவர்)
பிந்தைய பதிப்பு 1.4.9 / செப்டம்பர் 1 2008 (2008-09-01)
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ்
வகை வின்டோஸ் நிறுவல்
அனுமதி மூடியநிரல் / இலவச மென்பொருள்
இணையத்தளம் http://www.nliteos.com/
விலைற்
உருவாக்குனர் டினோ நுஹஜிக் (நுகி என்றும் அறியப்படுவர்)
பிந்தைய பதிப்பு 1.2 Beta / ஆகத்து 4 2008 (2008-08-04)
இயக்குதளம் மைக்ரோசாப்ட் வின்டோஸ் விஸ்டா
வகை வின்டோஸ் நிறுவல்
அனுமதி மூடியநிரல் / இலவச மென்பொருள்
இணையத்தளம் http://www.vlite.net/

செயன்முறை

என்லைற் கணினியின் வன்வட்டிற்கு (ஹாட்டிஸ்க்) இயங்குதள நிறுவல் குறுவட்டு (சீடி) ஐப் பிரதியெடுத்துக் கொள்ளும். இவ்வாறு வன்வட்டில் பிரதியெடுக்கப்பட்டதில் சீட்டாட்டம் (காட்ஸ்) போன்ற கணினி விளையாட்டுக்கள் மற்றும் அலுவலகத்திற்குப் பிரயோசனம் இல்லாத மென்பொருட்கள் போன்றவற்றைமுன்னரே நீக்கிவிடவும் தேர்வுகளை விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும் நிறுவமுன்னரேயே தேர்ந்தெடுக்கவும், இயங்குதள மேம்படுத்தல்களை சேர்க்கவும் மற்றும் இயக்கிகள் என்றழைக்கப்படும் டிவைஸ் டிரைவர்களை ஒன்று சேர்க்கவும் இம்முறை உதவுகின்றது. என்லைற் ஊடாக சாதாரண முறையூடாக நீக்கமுடியாத இண்டநெட் எக்ஸ்புளோளர், விண்டோஸ் மூவி மேக்கர், விண்டோஸ் மீடியாப் பிளேயர் போன்றவற்றை நீக்கவும் உதவுகின்றது.

இவ்வாறான தேர்வுகளைப் பயனர் தேர்ந்தெடுத்த பின்னர் ISO முறையில் இயங்குதள நிறுவலைச் சேமிக்கவோ அல்லது நேரடியாக CD/DVD Writer ஊடாக CD மற்றும் DVD களை உருவாக்கிக் கொள்ளவோ இயலும்.

முக்கியத்துவம்

கணினிப் பாவனையாளர்களுக்குத் தேவையற்ற கோப்புக்களை எல்லாம் நிறுவாமல் துப்பரவாக வேண்டிய கோப்புக்களை அதிகளவு சுமையை ஏற்படுத்தாத விண்டோஸ் நிறுவல்களை நிறுவல்களை விரும்பியதால் இது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

என்லைட் கணினியில் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதனால் தேவையான வளங்கள் கணினியில் இயங்கும் வேறு மென்பொருட்களிற்குக் கிடைக்கின்றது. கணினியில் ஆவணங்களை ஆவணப்படுத்துதலும் (Backup) வேகமாகச் செய்யமுடிகின்றது.

இதன் இன்னோர் பயனுள்ள பிரயோகமானது சாட்டா மற்றும் ரெயிட் டிவைஸ்டிரைவர்களை விண்டோஸ் இயங்குதள நிறுவலுடன் ஒருங்கிணைத்தல் ஆகும். ஏனைய டிவைஸ் டிரைவர்களை பின்னர் நிறுவிக்கொள்ளலாம் அல்லது டிரைவர்பக்ஸ் தளத்தூடாக டிவைஸ்டிரைவர்களைப் பெற்று நிறுவிக்கொள்ளலாம். டிரைவர்பக்ஸ் தளத்தூடான டிரைவர்களைச் சேர்ப்பதானால் முதலில் என்லைட் ஊடா இய்ங்குதள நிறுவல்களில் வேண்டியமாற்றம் செய்து பின்னர் டிவைஸ்டிரைவர்களை ஒருங்கிணைத்து (டிரைவர்பக்ஸ்.நெட் தளத்தில் உள்ள டிரைவர்பக்ஸ் இண்டிகிரேட்டர் மென்பொருளூடாக) பின்ன மீண்டும் என்லைட் மென்பொருளைப் பயன்படுத்தி ISO கோப்பை உருவாக்கிக் கொள்ளலாம். நெகிழ்வட்டு (பிளாப்பி) இல்லாத கணிகளில் கூட ஒரு பிரச்சினையும் இன்றி இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளலாம்.

விமர்சனங்கள்

தேவையான விண்டோஸ் பாகங்கள் நீக்கப்படுவதால் கணினி சிஸ்டங்களின் நம்பகத் தன்மை குறைந்துவிடும். கணினியில் பிழைகளைத் திருத்தும் கணினித் தொழில்நுட்பவியலாளர்களுக்கு இவ்வாறான விருப்படியான நிறுவல்கள் சிரமங்களை ஏற்படுத்தக் கூடும்

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.