என் தம்பி
என் தம்பி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, மற்றும் பலரும் இணைந்து நடித்திருந்தனர்.
என் தம்பி | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | பாலாஜி சுஜாதா பிக்சா்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரோஜாதேவி |
வெளியீடு | சூன் 7, 1968 |
நீளம் | 4353 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் ஆக கண்ணன்/சின்னையா
- சரோஜாதேவி ஆக ராதா
- கே. பாலாஜி ஆக விஸ்வம்
- மேஜர் சுந்தரராஜன் ஆக சுந்தர பூபதி
- ப. கண்ணாம்பா ஆக கண்ணன் தாயார்
- பண்டரிபாய் ஆக மீனாட்சி
- சுந்தரி பாய் ஆக அலங்காரம்
- ஜாவர் சீதாராமன் ஆக கருணாகர பூபதி
- வி. கே. ராமசாமி ஆக பா்மா சிங்காரம்
- நாகேஷ் ஆக சபாபதி
- மாதவி ஆக ரஞ்சிதம்
- ரோஜா ரமணி ஆக உமா
- ராஜசுலோசனா ஆக (நடனம்)
- பி. டி. சம்பந்தம் ஆக (கௌரவ தோற்றம்)
- தேவமனோகரி ஆக தங்கம்
- ராஜேஸ்வரி ஆக சுமதி
படத்தின் குறிப்புகள்
இந்த படத்தில் சிவாஜி கணேசன் மிகவும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் நடித்திருந்தார். மேலும் சிவாஜிகணேசன் அவர்களுடன் முதலில் ஜோடியாக இணைந்து நடித்தவர் கே. ஆர். விஜயா அவர்கள் பின்பு இந்த படத்தில் கடைசி பாடலாக வரும் தட்டட்டும் கை தழுவட்டும் என்ற பாடல் காட்சியில் நடிக்கும் போது சிவாஜி சாட்டையால் ஆடும் போது அடிப்பது போல் இருந்தது. இந்த காட்சியில் கே.ஆர்.விஜயா அவர்கள் வெறு நடிகையயை வைத்து எடுத்து கொள்ளுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆன கே. பாலாஜியிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு இந்த படத்தை கைவிடும் தருவாயில் பாலாஜியும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரும் இருந்தபோது கதாசிரியர் ஜாவர் சீதாராமன் அவர்கள் இந்த படம் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆஸ்த்திரபரலு திரைப்படம். இதை தமிழிலும் எடுத்தால் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறினார். இருந்தபோதிலும் படத்தில் நடிகை பிரச்சனையயை ஜாவர் சீதாராமன் அவர்கள் கே.பாலாஜி உடன் இணைந்து நடிகை சரோஜா தேவி அவர்களை முடிவு செய்தார் ஆனால் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் திருமணத்திற்க்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் உடல் குண்டாகவும், பருமனாகவும் இருந்ததால் காட்சியில் அவர் நடித்தால் சரியாக வருமா என்று கேட்டவுடன் அதற்கு அந்த கதைமேதை ஜாவர் சீதாராமன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கபட்ட ஷாட்பெல்ட் என்ற பெல்ட்டை சரோஜாதேவியின் வயிற்றில் அணிந்து ஒல்லியாக இருப்பதை போன்று உடல் தேகத்துடன் சரோஜாதேவி ஐ நடிக்க வைத்தார் ஜாவர் சீதாராமன் அவர்கள் பின்பு அந்த படமும் தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சியும் முழுமையாக காட்சி படமாக்கபட்டு படம் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் ஜாவர் சீதாராமன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சரோஜாதேவிக்கு தந்தை வேடத்தில் நடித்தார் என் தம்பி படத்தில்
உசாத்துணை
- En Thambi (1968), ராண்டார் கை, தி இந்து, சூன் 25, 2016