ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம்

ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் (Convention on the Rights of Persons with Disabilities) என்பது, ஊனமுற்ற மக்களின் மதிப்பையும், உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அனைத்துலக மனித உரிமைகள் ஒப்பந்தம் ஆகும்.[1] ஊனமுற்றோர் மனித உரிமைகளை அனுபவிப்பதை முன்னெடுத்துப், பாதுகாத்து, உறுதி செய்வதுடன் அவர்கள் சட்டத்தில் கீழ் சமமான நிலையைப் பெறுவதை உறுதி செய்வதும், இவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய எல்லாத் தரப்பினரதும் கடமை ஆகும். ஊனமுற்றோர் சமுதாயத்தில் மனித உரிமைகளோடு கூடிய முழுமையான உறுப்பினராகக் கருதப்படுவதற்கும், உரிய மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களை அனுதாபத்துக்கு உரியவர்களாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்கும் இந்தச் சாசனம் ஊக்கியாகத் தொழிற்பட்டு உதவியுள்ளது.

ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம்

  states parties
  states that have signed, but not ratified
  states that have not signed
உருவாக்கம் 13 டிசம்பர் 2006
கையெழுத்திட்டது 30 மார்ச் 2007
இடம் நியூ யார்க்
நடைமுறைக்கு வந்தது 3 மே 2008
நிலை 20 ஏற்புறுதிகள்
கையெழுத்திட்டோர் 159
தரப்புகள் 151
வைப்பகம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்
மொழிகள் அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், இசுப்பானியம் என்பன.

வரலாறு

இதற்கான பேச்சுக்களை இலத்தீன் அமெரிக்கப் பிரதேசக் குழுவின் உதவியுடன் மெக்சிக்கோ தொடக்கிவைத்தது. 2002ல் மேற்கு ஐரோப்பாவும் பிறவும் சேர்ந்த குழுவின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தம் தாமதமானது. 2002-3 ஆண்டுப் பகுதியில் நியூசிலாந்து தலையிட்டு பிரதேசங்களிடையே சுமுக நிலையை எட்ட உதவியது. பின்னர் நியூசிலாந்து இடைக்காலக் குழுவொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்று, பிற குழு உறுப்பு நாடுகளான யோர்தான், கொசுத்தாரிக்கா, செக் குடியரசு, தென்னாபிரிக்கா ஆகியவற்றினதும், கொரியா மெக்சிக்கோ ஆகிய நாடுகளினதும் உதவியுடன், ஆகத்து த்06ல் ஒருமனதான உடன்பாடு ஏற்பட வழிவகுத்தது. இதனால் இச்சாசனம், எல்லாப் பிரதேசங்களினதும் வலுவான ஆதரவுடன், வரலாற்றில் மிகக் குறைந்த காலத்தில் ஆதரவு பெற்ற மனித உரிமைகள் முறையாவணம் ஆனது. 2007ல் 159 நாடுகள் இதில் கைச்சாத்திட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 126 நாடுகள் இதை ஏற்புறுதி செய்தன.

இதன் உரை, 2006 டிசம்பர் 13 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2007 மார்ச் 30 அன்று கைச்சாத்திடுவதற்காக வெளியிடப்பட்டது. 20வது தரப்பு கைச்சாத்திட்ட பின்னர் 2008 மே 3 ஆம் தேதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.[2] செப்டெம்பர் 2014 நிலவரப்படி இச்சாசனத்துக்கு 159 கைச்சாத்தாளர்கள் இருப்பதுடன், 151 பங்காளர்களும் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் 2010 டிசம்பர் 23ல் ஏற்புறுதி செய்தது. ஐக்கிய அமெரிக்காவின் செனட் சபையில் ஏற்புறுதிக்கான முன்மொழிவு, 2012 டிசம்பர் 3ம் தேதி இடம் பெற்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் அந்நாடு இன்னும் ஏற்புறுதி செய்யவில்லை.[3]

குறிப்புகள்

  1. Convention on the Rights of Persons with Disabilities
  2. "Landmark UN treaty on rights of persons with disabilities enters into force". Scoop (208-05-05). பார்த்த நாள் 2008-06-28.
  3. Helderman, Rosalind S. (2012-12-04). "Senate rejects treaty to protect disabled around the world - Washington Post". Articles.washingtonpost.com. பார்த்த நாள் 2013-09-20.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.