உய்குர் ககானேடு

உய்குர் ககானேடு (அல்லது உய்குர் பேரரசு அல்லது டோகுஸ் ஓகுஸ் நாடு)[1] என்பது எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சுமார் ஒரு நூற்றாண்டுக்கு நிலைபெற்றிருந்த ஒரு துருக்கிய பேரரசு[2] ஆகும்.

உய்குர் ககானேடு
Location of உய்குர் பேரரசு
Status பேரரசு
தலைநகரம்ஒர்டு-பாலிக்
சமயம் தெங்கிரி மதம், மானி சமயம், புத்த மதம்
அரசாங்கம் முடியாட்சி

வரலாறு

வளர்ச்சி

கி.பி. 657 இல் மேற்கு துருக்கிய ககானேடு சீனாவின் தாங் அரசமரபால் தோற்கடிக்கப்பட்டது. இத்தோல்விக்குப் பின்னர் உய்குர்கள் தாங் அரசமரபின் பக்கம் இணைந்தனர். இதற்கு முன்னரே உய்குர்கள் தாங் அரசமரபுடன் இணைந்து கி. பி. 627 இல் திபெத்தியர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு எதிராக போரிட்டபோது தாங் அரசமரபுடனான உறவுக்கு ஒரு விருப்பத்தை வெளிக்காட்டி உள்ளனர்.[3][4]

கி.பி. 742 இல் உய்குர்கள், கர்லுக்குகள் மற்றும் பஸ்மைல்கள் இரண்டாவது துருக்கிய ககானேட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.[5]

கி. பி. 744 இல் பஸ்மைல்கள் துருக்கிய தலைநகரான ஒடுகனை கைப்பற்றினர். ஆட்சி செய்த ஒஸ்மிஸ் ககானை கொன்றனர். பின்னர் அந்த வருடத்தில் பஸ்மைல்களுக்கு எதிராக உய்குர்-கர்லுக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டு பஸ்மைல்கள் தோற்கடிக்கப்பட்டனர். பஸ்மைல்களின் ககான் கொல்லப்பட்டார். ஒரு மக்கள் குழுவாக பஸ்மைல்கள் இல்லாமலே போய்விட்டனர். உய்குர்கள் மற்றும் கர்லுக்குகளுக்கு இடையிலான பகையானது பின்னர் கர்லுக்குகளை மேற்கு நோக்கி ஜெடிசு பகுதிக்கு இடம்பெயர வைத்தது. கர்லுக்குகள் டுர்கேஷ் மக்களுடன் பின்னர் சண்டையிட்டனர். டுர்கேஷ் மக்களை தோற்கடித்து 766 இல் அவர்களின் பகுதியை கைப்பற்றினர்.

பின்வந்தவர்கள்

டர்பன் பகுதியை சேர்ந்த உய்குர் அரசர் பணியாட்களால் உபசரிக்கப்படுதல். மோகாவோ குகை 409, 11-13 ஆம் நூற்றாண்டு.
மங்கோலியாவில் உய்குர்களின் தலைநகரான ஒர்டு-பாலிக்.

உய்குர் ககானேட்டை அழித்து அதன் பின்னர் எனிசை கிர்கிசுக்கள் எனும் இனத்தவர் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் நுட்பமனவர்கள் கிடையாது. அவர்களுக்கு தாங்கள் வென்ற அரசை ஆட்சி செய்யும் எண்ணம் சிறிதளவே இருந்தது. கிழக்கில் பைகால் ஏரியில் இருந்து மேற்கில் இர்டிஷ் ஆறு வரை இருந்த நிலப் பகுதிகளை அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கிர்கிசுக்கள் தங்கள் பக்கம் இணைந்த குலுக் பகா என்ற உய்குர் இனத்தை சேர்ந்தவரை ஒர்கோன் பள்ளத்தாக்கின் ஆட்சியாளராக நியமித்தனர். தாங் அரசமரபின் இசோங் பேரரசரின் ஆட்சியின் போது (860–873) தாங் மற்றும் கிர்கிசுக்களுக்கு இடையே 3 முறை தொடர்பு ஏற்பட்டதாக பதிவுகள் உள்ளன. ஆனால் அந்த தொடர்பு எந்த வகையிலானது என்பதைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. கிர்கிசுக்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதில் எந்தவித பயனும் இல்லை என தாங் அரச மரபின் ஆட்சியாளர்கள் கருதினர். ஏனெனில் தாங் பிரிவினருக்கு உய்குர்கள் ஒரு பிரச்சனையாக இல்லாமல் போய்விட்டனர். கி. பி. 890 இல் கிதான்கள் ஒர்கோன் பள்ளத்தாக்கைக் கிர்கிசுக்களிடமிருந்து கைப்பற்றினர். இதற்குப்பிறகு கிர்கிசுக்கள் எதிர்ப்பை காட்டியதாக எந்தவித பதிவுகளும் இல்லை.[6][7]

உசாத்துணை

  1. Bughra 1983, பக். 50–51.
  2. Benson 1998, பக். 16–19.
  3. Latourette 1964, பக். 144.
  4. Haywood 1998, பக். 3.2.
  5. Sinor 1990, பக். 317–342.
  6. Barfield 1989, பக். 165.
  7. Golden 1992, பக். 181.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.