துருக்கிய மக்கள் குழு
துருக்கிய மக்கள் குழு என்பது நடு, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு ஆசியா மற்றும், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளின் இன மொழிக் குழுக்களின் தொகுப்பு ஆவர். இவர்கள் தற்கால தெற்கு சைபீரியா மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் என்று கருதப்படுகின்றனர்.[1] இவர்கள் மேற்கு லியாவோ ஆற்றுப் படுகையில் (தற்கால மஞ்சூரியா) தங்களது பூர்வீகத்தை உடையவர்கள் என்று கருதப்படுகிறது.[2] துருக்கிய மக்கள் துருக்கிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு மொழியை பேசுகின்றனர்.[3] இம்மக்கள் குறிப்பிட்ட கலாச்சார பண்புகள், பொதுவான முன்னோர் மற்றும் வரலாற்று பின்புலங்களை கொண்டுள்ளனர்.
காலப்போக்கில் பிற இனங்களுடன் தொடர்புக்கு வந்த துருக்கிய குழுக்கள் அவர்களை தங்களது இனத்தில் சேர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக ஒரு சில முக்கிய குழுக்கள் மற்ற துருக்கிய குழுக்களை விட பன்முகத் தன்மை உடையனவாக உள்ளன. பல வேறுபட்ட இனக் குழுக்கள் வரலாறு முழுவதும் மொழிமாற்றம், அந்நிய கலாச்சாரம் ஏற்பு, இனக்கலப்பு மற்றும் மத மாற்றம் காரணமாக துருக்கிய மக்களின் ஒரு பகுதியினராக மாறியுள்ளனர். இதன்காரணமாக மரபணுவை பொருத்தவரையில், பெரும்பாலான துருக்கிய குழுக்கள் அவற்றின் தோற்றத்தில் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பெருமளவு வேறுபடுகின்றனர்.[1]
உசாத்துணை
- Turkic people, Encyclopædia Britannica, Online Academic Edition, 2010