உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு

கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை

  • கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழகுகிறார்கள்.
  • கி. மு. 4,000 - எகிப்தியர்கள் Wine (பழ ரச பானம் ?) செய்வதில் நிபுணத்துவம் அடைகிறார்கள்.
  • கி.மு. 2,000 - எகிப்தியர்களும் சுமேரியர்களும் வெண்ணை செய்வதிலும் Brewing-லும் நிபுணத்துவம் அடைகிறார்கள்.
  • கி. மு. 1,800 - Yeast-களைக் கொண்டு Wine, Beer, Bread செய்வதில் முதன்முதலாக உயிரித் தொழில்நுட்பக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன.மது பானம்,Baking செய்வதில் பயன்பட்ட Saccharomyces வகை Yeast-கள் வணிக முக்கியத்துவம் கொண்டிருந்தன.
  • கி. மு. 500 - சீனாவில்,moldy soybean curd நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்ல பயன்பட்டது.
  • கி. மு. 300 - கிரேக்கர்கள் ஒட்டுத் தாவரங்களை (grafting techniques for plant breeding) செய்யும் முறையை அறிகிறார்கள்.

கி. பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை

  • கி. பி. 100 AD - சீனர்கள், தூளாக்கப்பட்ட chrysanthemum-களிலிருந்து முதல் பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிக்கின்றனர்.
  • கி. பி. 1663 - ராபர்ட் ஹூக்கின் திசுள் (Cell) கண்டுபிடிப்பு.
  • 1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின் பாக்டீரியா கண்டுபிடிப்பு.
  • 1700கள் - பல Hybrid வகை தாவரங்களை ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.
  • 1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு.
  • 1833 - முதல் enzyme கண்டுபிடிப்பு.
  • 1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால் ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு;ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார்.
  • 1859 - சார்லஸ் டார்வினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "On the Origin of Species" புத்தகம் வெளியீடு.
  • 1861 - Louis Pasteur பால் பதப்படுத்தும் முறையை கண்டறிகிறார்.
  • 1865 - ஜான் கிரிகோர் மெண்டல்,Law of heridity-ஐக் கண்டுபிடிக்கிறார்.
  • 1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

கி.பி.19ஆம் நூற்றாண்டு முதல்..

  • 1919 - 'Biotechnology’ என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது.
  • 1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின் பென்சிலின் (Antibiotic) கண்டுபிடிப்பு.
  • 1941 - Danish நுண்ணுயிரியலாளர் ஏ. ஜஸ்டின் "Genetic engineering” (மரபணுப்பொறியியல்) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.
  • 1942 - பென்சிலின் உற்பத்தி.
  • 1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும் முதன்முதலில் DNAவின் Double helix வடிவத்தை விவரிக்கிறார்கள்.
  • 1958 - முதன்முதலில், சோதனைக்குழாயில் DNA உருவாக்கப்பட்டது..
  • 1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபியல் குறியீடுகளை ( genetic codes )கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள்.
  • 1970 - முதல் restriction enzyme-ஐ அமெரிக்க நுண்ணுயிரியலாளர் டேனியல் நேதன்ஸ் ( Daniel Nathans ) கண்டுபிடித்தார்.restriction enzyme-கள் மரபியல் பண்புகளைத் தரும் வேதிப்பொருட்களை ( genetic material ) பல துண்டுகளாக வெட்ட உதவுவதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கிறது.
  • 1971 - முதன்முதலில் ஒரு முழு ஜீன் ( Gene ) சோதனைச்சாலையில் உருவாக்கப்படுகிறது.
  • 1972 - DNA துண்டுகளை ஒட்ட உதவும் DNA லைகேஸ் ( DNA ligase ) முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது.

முதன்முதலில், இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் DNA துண்டுகளை இணைத்து recombinant molecule செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது.

  • 1973 - Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது.
  • 1976 - ஒரு குறிப்பிட்ட ஜீனை உருவாக்க எந்தெந்த கார ஜோடிகள் ( Base pairs ) சேர்ந்து உருவாக்குகின்றன என்று கண்டறியப்படுகின்றது.
  • 1977 - மிக நீளமான DNA துண்டுகளையும் வேகமாக Sequence செய்வதற்கான செய்முறைகள் கண்டறியப்படுகின்றன.
  • 1978 - Recombinant மனித இன்சுலின் ( Insulin ) முதன்முதலில் உருவாக்கப்படுகிறது.
  • 1980 - முதல் செயற்கை recombinant DNA மூலக்கூறினை உருவாக்கியதற்காக Paul Berg, Walter Gilbert, Fredrick Sanger ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • 1981 - முதல் transgenic விலங்கு 'the golden carp', சீன விஞ்ஞானிகளால் படி எடுக்கப்படுகிறது ( Cloned ).
  • 1982 - கால்நடைகளுக்கான முதல் recombinant DNA தடுப்பு மருந்து உருவாக்கம்.

Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர்.

  • 1990 - உலகின் முதல் 'மனித மரபு ரேகை திட்டம்' ( Human genome project ) தொடங்குகிறது.
  • 1997 - டாலி - படியெடுக்கப்பட்ட முதல் பாலூட்டி - பிறப்பு.

மனித மரபு ரேகை மற்றும் மனித உரிமைகள் மீதான அனைத்துலக தீர்மானத்தை யுனெசுகோ அறிவிக்கிறது.

  • 1998 - கிட்டத்தட்ட 30,000 ஜீன்களின் இருப்பிடத்தை வரையறுக்கும் முதல் 'மாதிரி மனித மரபு ரேகை' அறிவிப்பு. ( First draft of HUman Genome )
  • 2000 - அமெரிக்க விஞ்ஞானிகள் Craig Venter மற்றும் Francis Collins முதல் முழுமையான மனித மரபு ரேகையை உலகுக்கு அறிவிக்கிறார்கள்.

DNAவின் double helix வடிவத்தை வாட்சனும் க்ரிக்கும் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் நிறைவு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.