இலங்கையில் அரச சித்திரவதை

இலங்கை அரசு சித்திரவதையைப் பயன்படுத்துவதாக ஐநாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.[1] காவல்துறை, படைத்துறை ஆகிய இரண்டும் சித்திரவதையைப் பயன்படுத்துகின்றன. ஆசிய மனித உரிமைகள் மையத்தின் அறிக்கை (Torture and Lawless Law Enforcement in Sri Lanka) சித்திரவதை இலங்கைச் சட்டத்தின் அடிப்படை நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அங்கம் என்று கூறுகிறது[2].


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலகம் எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

நான்காம் மாடி விசாரணை

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID – Terrorism Investigation Division) நடத்தும் விசாரணை, நான்காம் மாடி விசாரணை என ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது[3].

கொழும்பு நகரில் குற்றவியல் விசாரணைத் துறையின் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (CID - Criminal Investigation Department), நான்காவது மாடியில் தீவிரவாத விசாரணைப் பிரிவும் செயல்படுகின்றன.

தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு எதிரான போராட்டங்கள்

  • எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல், பாலேந்திரன் ஜெயகுமாரி எனும் பெண்மணியை ஏறத்தாழ 200 நாட்களுக்கு தனது விசாரணைப் பிடியில் இப்பிரிவு வைத்திருந்தது. இதனைக் கண்டித்து சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து போராட்டம் ஒன்றினை 2014, செப்டம்பர் 30 அன்று நடத்தினர்[4].

உசாத்துணை

  • பக்கம் எண்கள்: 27 - 31, முள்வலி எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2010; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)
  • சித்திரவதை - (ஆங்கில மொழியில்)

மேற்கோள்கள்

  1. UN human rights expert reports allegations of torture in Sri Lanka
  2. Torture and Lawless Law Enforcement in Sri Lanka
  3. "'I cried every day': inside Sri Lanka's 'No Fire Zones'". channel4 (26 மார்ச் 2014). பார்த்த நாள் 29 நவம்பர் 2014.
  4. "‘Sri Lanka’s Prevention of Terrorism Act should be repealed’". தி இந்து (30 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 29 நவம்பர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.