இலங்கை பறக்கும் பாம்பு

இலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வன வகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இதன் பூர்வீகம் இலங்கையாக இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கிரிசொபியா (Chrysopelea) என்ற குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இவை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.[1][2] பாம்பு இனங்களில் ஒன்றான இது, விசத் தன்மை குறைந்து காணப்படுகிறது.

இலங்கை பறக்கும் பாம்பு
இலங்கையில் உள்ள கண்டலமா என்ற கிராமத்தில் பிடிக்கப்பட்டது.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணிChordata]]
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: பாம்பு
குடும்பம்: Colubridae
துணைக்குடும்பம்: Colubrinae
பேரினம்: Chrysopelea
இனம்: C. taprobanica
இருசொற் பெயரீடு
Chrysopelea taprobanica
(Smith, 1943)

பரவல்

உலகில் உள்ள பாம்பு இனங்களில் இது ஒரு அரிதானது ஆகும். இது வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிறது. தென்கிழக்காசியா பகுதியில் இலங்கை உட்பட வியட்நாம், கம்போடியா, போன்ற நாடுகளிலும், இந்தியாவில் அரிதாகவும் காணப்படுகிறது.[3]

தோற்றம்

உடல் வாக்கில் அனைத்துப் பாம்புகளைப்போல் தோன்றினாலும் இதன் உடலின் மேல் பகுதியில் கட்டுவிரியன் பாம்பைப்போல் கருப்பு கோடுகள் காணப்படுகின்றன. தலைப்பகுதியில் வலுவான கருப்பு நிறத்தில் நல்ல பாம்பைப் போல் படம் எடுப்பதுபோன்ற தோற்றம் கொண்ட கோடுகள் உள்ளன.[4]

மேற்கோள்கள்

  1. taprobanica SMITH, 1943ரெப்டைல்ச் டெடாபாஸ்
  2. கோவையில் அரிய வகை 'பறக்கும் பாம்பு' மீட்புதி இந்து தமிழ் 21 மார்ச் 2016
  3. snake spotted in Tamil Naduதி இந்து 22 மார்ச் 2016
  4. snake spotted in Tamil Naduதி இந்து 22 மார்ச் 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.