இரும்புத்திரை (திரைப்படம்)

இரும்புத்திரை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

இரும்புத்திரை
இயக்கம்எஸ். எஸ். வாசன்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி பிலிம்ஸ்
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
எஸ். வி. சுப்பைய்யா
எஸ். வி. ரங்கராவ்
டி. பாலசுப்பிரமணியன்
கே. ஏ. தங்கவேலு
வசுந்தரா தேவி
பி. சரோஜா தேவி
பண்டரிபாய்
வனஜா
ஒளிப்பதிவுபி. எல்லப்பன், என். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புஎம். உமாநாத்
வெளியீடுசனவரி 14, 1960
நீளம்18396 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்வேடம்
வைஜெயந்திமாலாமஞ்சு
பி. சரோஜாதேவிமாலதி
சிவாஜி கணேசன்மாணிக்கம்
கே. ஏ. தங்கவேலுகொண்டமுத்து
எஸ். வி. ரங்கராவ்ஆலை அதிபர்
பண்டரிபாய்மாணிக்கம், கொண்டமுத்து ஆகியோரின் தாய்
வசுந்தரா தேவிமஞ்சுவின் தாய்

தயாரிப்பு விபரம்

1959 ஆம் ஆண்டில் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படத்துக்கு பைகாம் (Paigham) எனப் பெயரிப்பட்டது. தமிழ்ப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைப் பரிசீலித்து இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஒரு விருந்து வைத்ததுடன் பெயரை முன்மொழிந்த பையனுக்கு பரிசாக ஒரு தொகையும் அளித்தார் வாசன்.

நிஜ வாழ்வில் தாயும் மகளுமான வசுந்தரா தேவியும் வைஜெயந்திமாலாவும் இந்தப் படத்திலும் தாயும் மகளுமாக நடித்துள்ளார்கள்.

பாடல்கள்

எண்.பாடல்பாடியவர்/கள்' 'கால அளவு (நி:செக்)'பாடலாசிரியர்
1யூடியூபில் என்ன செய்தாலும்ராதா ஜெயலட்சுமி02:52பாபநாசம் சிவன்
2யூடியூபில் நெஞ்சில் குடியிருக்கும்டி. எம். சௌந்தரராஜன் & பி. லீலா03:57பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
3யூடியூபில் ஆசை கொண்ட நெஞ்சிரண்டுபி. லீலா04:27
4யூடியூபில் மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்சீர்காழி கோவிந்தராஜன்02:40
5யூடியூபில் கையில வாங்கினேன் பையில போடலேதிருச்சி லோகநாதன்03:00
6யூடியூபில் டப்பா டப்பா டப்பாசீர்காழி கோவிந்தராஜன்03:12
7யூடியூபில் நன்றி கெட்ட மனிதருக்குசீர்காழி கோவிந்தராஜன்03:22
8யூடியூபில் படிப்பிற்கொரு கும்பிடுபி. லீலா & ஜிக்கி02:47கொத்தமங்கலம் சுப்பு
9யூடியூபில் ஏரை புடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும்திருச்சி லோகநாதன்03:19
10யூடியூபில் போட்டுக்கிட்டாதிருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி03:32

மேற்கோள்கள்

  1. "1960 – இரும்புத் திரை". lakshmansruthi.com. பார்த்த நாள் 2016-10-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.