இராவுத்தர்
இராவுத்தர் அல்லது ராவுத்தர் (Rowther or Ravuthar) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். லப்பை மற்றும் மரைக்காயர் என்பார் மற்ற இரு பிரிவினர் ஆவர். தமிழ் முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவி உள்ளனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(ஒரு மில்லியன்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
சன்னி இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழ் முஸ்லிம் |
பெயர் காரணம்
இசுலாமியர்களில் மரைக்காயர், இராவுத்தர் என்பது அவர்கள் செய்து வந்த தொழில்களின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் ராவுத்தர் என்றால் குதிரை ஓட்டி என்று பொருள். குதிரை வணிகம் செய்து வந்தவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர். மரைக்காயர் (மரக்கலம்+ ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'ரா-இத்' என்றால் குதிரை வீரன் என்று பொருள். வடமொழியில் 'ராஹுத்' என்றும், தெலுங்கில் 'ரவுத்து' என்றும் பொருள்.
மூலமும் வரலாறும்
கி.பி 1212 ஆம் ஆண்டு சோழ மன்னர்களின் உதவியுடன் ஒட்டாமன் பேரரசை சேர்ந்த துருக்கிய வியாபாரிகள் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களில் தங்கி இஸ்லாம் மதத்தை பரப்பினார். பின்னர் தஞ்சாவூர் வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கயே தங்கிவிட்டனர்.
அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அடுத்து பட்டத்துக்கு வருவது யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் புதல்வர்களான ஜதவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் ஜதவர்மன் வீர பாண்டியன் ஆகிய இருவரும் அடுத்த பட்டத்துக்காக சண்டையிட்டனர். இவர்களில் சுந்தர பாண்டியன் தன் தந்தை மாறவர்மன் குலசேகர பாண்டியனை கி.பி 1310-ல் கொன்று விட்டான். பின்பு ஆட்சியை பிடிக்க தனக்கு உதுவுமாறு டெல்லியை ஆண்ட தில்லி சுல்தான், அலாவுதீன் கில்ஜியை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற அலாவுதீன்கில்ஜி, தனது தளபதி மாலிக் கபூர் என்பவனை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தான். மாலிக் கபூரும் அவ்வாறே சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்து அவரை கி.பி 1311இல் அரியணையில் ஏற்றினார். பின்பு அவருடைய உதவியின் மூலம் தமிழ்நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்பினான்.
அதன் பிறகு சுந்தர பாண்டியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தளபதி மாலிக் கபூர், சுந்தர பாண்டியனை முறியடித்து விட்டு மதுரை ஆட்சியை கைப்பற்றினார். அதன் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் மதத்தை அவர் தமிழ்நாட்டில் பரப்பினான். பொதுவாக அலாவுதீன்கில்ஜியும் சரி, மாலிக் கபூரும் சரி தமிழ்நாட்டை டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. அவர்கள் இருவரின் விருப்பமும் தமிழ்நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்புவது மட்டுமே. அந்த ஆசை நிறைவேரிவிட்டதாலும், மேலும் சில பிரட்சணைகளாலும் மாலிக் கபூர் சில ஆண்டுகளுக்குப்பிறகு மதுரையை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பிறகும் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு துருக்கியர்கள் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களிலும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் இஸ்லாத்தை பரப்பினர். இவர்கள் இருவர்களின் வழியில் வந்தவர்களே இராவுத்தர் என்று அழைக்கப்படுகின்றனர்
மேலும் சில தகவல்கள்
- இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர் உருதுு பேசுவது இல்லை.
- இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
- முற்காலத்தில் இவர்கள் பெரும்பாலும் குதிரை விற்கும் தொழிலே செய்து வந்ததாக கூறப்படுகின்றது. தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வியாபாபாரங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
- இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
- இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர். ஏனெனில் இவர்களே மற்ற இஸ்லாமிய பிரிவினரை விட அதிகம் துருக்கியர்களுடன் நெருக்கம் உடையவர்கள்.
- இவர்களின் பெரும்பாலான சமய வழிபாட்டு முறைகள் துருக்கியர் மற்றும் இராக்கியர் பாணியிலேயே அமைத்துள்ளது.
- பொதுவாக தமிழ்நாட்டில் முஸ்லிம்களை 'துலுக்கர்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது 'துருக்கியர்' என்ற வார்த்தை மருவியதாலே வந்தது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- J. P. Mulliner. Rise of Islam in India. University of Leeds chpt. 9. Page 215