ராஜீவ் காந்தி

ராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.

ராசீவ் காந்தி
9வது இந்தியப் பிரதமர்
பதவியில்
அக்டோபர் 31, 1984  டிசம்பர் 2, 1989
முன்னவர் இந்திரா காந்தி
பின்வந்தவர் வி. பி. சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 20, 1944
மும்பாய்
இறப்பு மே 21, 1991
ஸ்ரீபெரும்புதூர்
அரசியல் கட்சி காங்கிரஸ் (I)
வாழ்க்கை துணைவர்(கள்) சோனியா காந்தி
பிள்ளைகள்
பெற்றோர் பெரோஸ் காந்தி
இந்திரா காந்தி
சமயம் இந்து சமயம்
வீர பூமி, ராஜீவ் காந்தி உடல் எரியூட்டப்பட்ட இடம், தில்லி

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

சமய நல்லிணக்க நாள்

ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.