இராசுத்து
இராசுத்து(Rasht (பாரசீகம்: رشت [ɾæʃt] (
Raŝt Rəsht (மொழி?) | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
நகரம் | ||||||||
| ||||||||
| ||||||||
அடைபெயர்(கள்): மழை நகரம்,இராசுத்துச் சொர்க்கம் | ||||||||
![]() ![]() Raŝt | ||||||||
ஆள்கூறுகள்: 37°16′51″N 49°34′59″E | ||||||||
Country | ![]() | |||||||
Province | Gilan | |||||||
County | Rasht | |||||||
Bakhsh | Central | |||||||
அரசு | ||||||||
• Mayor | Ali Baharmast | |||||||
• City Council Chairman | Amir Hossein Alavi | |||||||
பரப்பளவு | ||||||||
• நகரம் | 180 | |||||||
மக்கள்தொகை (2016 Census) | ||||||||
• நகர்ப்புறம் | 679[1] | |||||||
நேர வலயம் | IRST (ஒசநே+3:30) | |||||||
• கோடை (பசேநே) | IRDT (ஒசநே+4:30) | |||||||
தொலைபேசி குறியீடு | 013 | |||||||
இணையதளம் | www.rasht.ir |
ஈரானின் காஸ்பியன் கடல் கடற்கரையில்,இராசித்து என்ற இந்த மிகப்பெரிய நகரம் அமைந்நுள்ளது. இதன் பந்தர்-இ அன்சாலி துறைமுகத்தைப் பயன்படுத்தி, காகேசியா, இரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையிலான, முக்கிய வர்த்தகமும், வாணிபமும் நடைபெறும் நடுப்பகுதியாக, இந்நகரம் திகழ்கிறது. இராசித்து, ஈரானின் முக்கிய சுற்றுலா செயற்களமாகவும் செயற்படுகிறது. இந்நகருக்கு, அருகிலுள்ள மலைகளில் உள்ளலின் ரிசார்ட் என்பதும், காஸ்பியனின் கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாக இருக்கின்றன.
வரலாறு
வரலாற்று அடிப்படையில், இராசித்து ஈரானை நாட்டியும், இரசியா நாட்டையும், ஐரோப்பாவுடன் இணைக்கும் நகரமாக அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளின், முக்கிய போக்குவரத்துச் சாலைகளையும், வணிக நடுவமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, இந்நகரமானது "ஐரோப்பாவின் நுழைவாயில்" என்று அழைக்கப்பட்டது. இந்த நகரம், 13 ஆம் நூற்றாண்டுக்களைக் குறித்த வரலாற்றைச் சொல்லும் நகரமாக உள்ளது. ஆனால், இதன் நவீன வரலாறு சஃபாவிட் காலத்திலிருந்து தான் தொடங்குகிறது. அக்காலக்கட்டத்தில், இந்த நகரமானது, ஏராளமான ஜவுளிப் பட்டறைகளைக் கொண்ட, மிகப்பெரிய பட்டு வர்த்தக நடுவமாக இருந்தது.
இந்தகரைப் பற்றிய முதற்குறிப்பு, கி. பி 682 ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் காணப்படுகிறது. அதன் பிறகு, பல நூற்றாண்டுகள் இந்நகரம் அமைதியான வளர்ச்சிப் பாதையில் கொழித்து வளர்ந்தது. 1669 ஆம் ஆண்டு கோசாக் போர்வீரரான, ஸ்டென்கா ராசின் என்பவன் இந்நகரத்தின் வளத்தைச் சூறையாடினான். 1714 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தால், இந்த நகரம் பெருமளவு அழிந்தது. 1722-1732 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த உருசீய-பாரசீகப் போர் காரணமாக, இரசிய வல்லாதிக்கத்தினர், இந்த நகரத்தினைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பு செய்தார்கள். 1901 ஆம் ஆண்டு இந்நகரின் மக்கள், பிளேக் தொற்றுநோய் தாக்கியதால், பெரும் பேரழிவிற்கு, இந்நகரம் உட்பட்டது. 1917-1920 ஆம் ஆண்டு துறைமுக நகரமான பந்தர்-இ அன்சாலியும், இராசித்து நகரமும், உருசிய, ஆங்கிலேய ஆயுதப்படைகளுகுக இடையை போர் நிகழ்ந்தது. அதில் ஆங்கிலேயர்கள் பின்னடைவு அடைந்து, இரசியர்கள் மீண்டும், இப்பகுதியை ஆண்டனர். அதன்பிறகு, 1920-1921 ஆண்டுகளுக்கு இடையில், குறுகிய கால கிலன் சோவியத் சோசலிச குடியரசு, அதன் தலைநகரான இராசித்தில் நிறுவப்பட்டது. 1937 ஆம் ஆண்டு, "சாலை வரி" வசூலிக்க வேண்டும், இரசிய அரசின் விருப்பத்தால் ஏற்பட்ட, ஒரு உள்ளூர் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு, இராசித்து நகரின் முதல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
- "Statistical Center of Iran > Home".
- இராசுத்து ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
- "Rasht, Gilan, Iran".