இரா. இராமகிருட்டிணன்
இரா. இராமகிருட்டிணன் (பிறப்பு: மே 19 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ஓசூரில் பிறந்த இவர் தெற்கு தொடருந்துவில் தொடர் வண்டி நிலைய பொறுப்பாளராகவும் (ஸ்டேசன் மாஸ்டர்), தொடருந்து துணை நிலை இராணுவப் படையில் சுபேதாராகவும் பணியாற்றியவர். பன்மொழிப் புலமை பெற்ற இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும்,முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் எழுதிய தகடூர் வரலாறும் பண்பாடும் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் “நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
இவர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை "தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள்" என்ற தலைப்பில் செய்துள்ளார். [2]
எழுதிய நூல்கள்
- தகடூர் வரலாறும் பண்பாடும்
- சிவபெருமானின் வீரட்ட தலங்கள்
- நவக்கிரகங்களின் ஆட்சி முறையும் மானுட விதியும்
- சிவ தாண்டவம்
- ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் ஓர் ஆய்வு
- கலாப்பிரியா கவிதைகளில் அகத்திணை மரபுகள்
- அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
மேற்கோள்கள்
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
- நூலாசியர் தகவல்கள் - அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் நூல்- நர்மதாப் பதிப்பகம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.