இரவிக்குமார் (எழுத்தாளர்)

இரவிக்குமார் (Ravikumar, பிறப்பு 1961) ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர். நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். நிறப்பிரிகை, 1990களில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்ததது.[1]

இரவிக்குமார்
பிறப்பு1961
பணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர்
வாழ்க்கைத்
துணை
பிரேமா
பிள்ளைகள்ராஜிவ்

அரசியல் வாழ்க்கை

இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

பிற செயல்கள்

இரவிக்குமார், ஆனந்த் என்பவருடன் இணைந்து "நவயானா" என்ற சாதி-எதிர்ப்பு நூல்கள் வெளியிடுவதற்கான பதிப்பகத்தை நிறுவினார். மேலும் அவர் மக்கள் கல்வி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். 'தலித்' மற்றும் 'போதி' என்ற இரு தமிழ்ப் பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் உள்ளார். தற்போது 'மணற்கேணி' என்ற மாதமிருமுறை வெளிவரும் ஆராய்ச்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் உள்ளார்.

'ஆக்சுபோர்ட் இந்தியா தமிழ் தலித்திய படைப்புகளின் தொகுப்பு' (2012) என்ற புத்தகத்தில் அழகரசனோடு ரவிக்குமார் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இந்தியன் எக்சுபிரசு நாளேட்டில் விமர்சகர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இந்த புத்தகத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"எழுதப்பட்ட விதம் அலாதியானது, ஆனால் இரண்டு குறிப்பிடப்படும்படியான குறைகள் இந்தத் தொகுப்பில் காணப்படுகின்றன.....ஒன்று, தமிழ் தலித்திய இலக்கியத்தின் குறிப்பிடப்படவேண்டிய சில முக்கியமான குரல்கள் விடுபட்டு போயிருக்கின்றன; இரண்டு, தமிழ் தலித்திய இலக்கியத்தின் வளர்ச்சியும், அது பேசும் அரசியலும் மிகவும் குறுகிய முறையில் பதியப்பட்டிருக்கின்றன. இது இந்தப் புத்தகத்தின் மையக் குறிக்கோளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது."

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.