இரத்தினகிரி

இரத்தினகிரி (Ratnagiri) என்பது ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள துறைமுக நகர் ஆகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கொங்கண் மண்டலம் பகுதியின் கீழ் வருகிறது. இக்கடலோரப்பகுதியில் அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும். இங்கு அரிசி, தேங்காய், முந்திரி, ஆகியனவும் பழவகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மீன் பிடித்தல் இங்கு முக்கியத் தொழிலாகும். பால கங்காதர திலகர் இப்பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 1876-ல் இது நகராட்சியாக மாற்றப்பட்டது.[1]

அமைவிடம்

இதன் அமைவிடம் 16.98°N 73.3°E / 16.98; 73.3.[2] ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர்கள் (36 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை

இந்தியாவின் 2008 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி [3]இங்கு 1,00,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்கள் 55% பேரும், பெண்கள் 45% பேரும் வசிக்கின்றனர். ஆண்களின் கல்வியறிவு 86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 87% ஆகவும் உள்ளது. இந்நகரின் மொத்த மக்கட்தொகையில் 6 வயதிற்குக் கீழான குழந்தைகள் 6% ஆகும். இந்நகரின் மக்கட்தொகையில் 70% மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகவும், இஸ்லாமியர் 20% ஆகவும் பிற மதத்தினர் 10% ஆகவும் உள்ளனர்.

பொருளாதாரம்

  • ரத்னகிரி கேஸ் பவர் லிமிடெட் நிறுவனம்[4]

முக்கிய இடங்கள்

  • ராஜ்பூர் கங்கா
  • மார்லேஸ்வர் கோயில்
  • திபா அரண்மனை
  • மாண்தேவி கடற்கரை
  • பாட்தி கடற்கரை
  • மிர்கர்வாடா கடற்கரை
  • மால்குண்டு
  • ஜெய்காத்
  • பாவாஸ்
  • நிவாலி அருவி
  • சிவசமார்த் காத்
  • கணபதி கோயில்
  • ரத்ன துர்க் கோட்டை
  • வேல்நேஷ்வர்
  • அடுலிட் பால் தாம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.