இரண்டாம் விருபக்ஷ ராயன்

இரண்டாம் விருபக்ஷ ராயன் (கி.பி. 1465-1485) விஜயநகரப் பேரரசை 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் சங்கம மரபினன்.

விஜயநகரப் பேரரசு
சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646
இரண்டாம் விருபக்ஷ ராயன் தமிழ் கல்வெட்டு, 1481 AD, Thiruvanamalai District, ASI Museum, வேலூர்க் கோட்டை

இவன், தனக்கு முன்னிருந்த மல்லிகார்ஜுன ராயனை ஆட்சியிலிருந்து அகற்றி அரசைக் கைப்பற்றினான். மல்லிகார்ஜுன ராயன் திறமையற்ற, ஊழல் மலிந்த அரசனாக இருந்ததுடன், பேரரசின் எதிரிகளுடன் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்தான். எனினும், இரண்டாம் விருபக்ஷ ராயனும், முன்னவனை விடச் சிறந்தவனாக இருக்கவில்லை. [1]

தோல்விகள்

தனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் வலுவின்மையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் கொங்கணம் கரையோரப் பகுதிகளை பஹமானி அரசிடம் இழந்தான். பஹமானி சுல்தான் மூன்றாம் முஹம்மத் ஷா அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் கோவா உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பஹமானி சுல்தான், கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் புருஷோத்தம கஜபதி, எல்லைக்குள் புகுந்து திருவண்ணாமலையைப் பிடித்தான். இத் தோல்விகள் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.

இறப்பு

இந் நிலை, 1485 இல், விருபக்ஷ ராயன் தனது சொந்த மகனான பிரௌத ராயன் கையாலேயே கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது.

மேற்கோள்கள்

  1. Vijayanagara and Bamini Kingdom 2.37
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.