இரண்டாம் உலக போருக்கு முந்தைய நிகழ்வுகள்
1922
ஏப்ரல்
ஏப்ரல் 3
- ஜோசப் ஸ்டாலின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொது செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
ஜூன்
ஜூன் 8
- ஐரிஷ் உள்நாட்டு போர் தேசியவாதிகளின் இரு பிரிவினரிடையே துவங்குகிறது
அக்டோபர்
அக்டோபர் 28
- பாசிசவாதிகள் இத்தாலிய அரசாங்கத்தை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பெனிட்டோ முசோலினி பிரதம மந்திரி ஆகிறார்.
டிசம்பர்
டிசம்பர் 6
- ஆங்கில-ஐரிஷ் உடன்படிக்கை அமலுக்கு வருவதன் மூலம் அயர்லாந்து குடியரசு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெறுகிறது.
டிசம்பர் 30
- ரஷ்யா , உக்ரைன் , பெலாரஸ் மற்றும் Transcaucasia நாடுகள் இணைந்து சோவியத் யூனியனை உருவாக்குகின்றன.
1923
ஜனவரி
ஜனவரி 11
- வெர்சாய் உடன்படிக்கையின்படி ஜெர்மனி செலுத்த வேண்டிய முதல் உலகப் போர் இழப்பீட்டுத் தொகையை பெற வேண்டி பிரான்சும் பெல்ஜியமும் ஜெர்மனியின் ரூர் பகுதியை ஆக்கிரமித்தன.
ஜூலை
ஜூலை 24
- நவீன துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்க லாசன்னே உடன்படிக்கை சுவிட்சர்லாந்தில் கிரீசு, பல்கேரியா மற்றும் முதல் உலகப்போரில் பங்கேற்ற மற்ற நாடுகளுக்கிடையில் கையெழுத்தானது.
அக்டோபர்
அக்டோபர் 29
- ஓட்டோமான் பேரரசு கலைக்கப்பட்டு துருக்கி குடியரசு நாடாக உருவாகிறது
நவம்பர்
நவம்பர் 8
- ஆட்சியை கைப்பற்ற அடோல்ப் ஹிட்லர் தலைமையில் நாட்சி கட்சி நடத்திய புரட்சி காவல் துறையினரால் முறியடிக்கப்படுகிறது.
1924
ஜனவரி
ஜனவரி 21
- விளாடிமிர் லெனின் இறக்கிறார். ஜோசப் ஸ்டாலின் தனது அதிகாரத்தை நிலைநாட்ட எதிரிகளை அழிக்க தொடங்குகிறார்.
பிப்ரவரி
பிப்ரவரி 1
- சோவியத் ஒன்றியம் ஐக்கிய ராஜ்ஜியத்தை அங்கீகரிக்கிறது.
ஏப்ரல்
ஏப்ரல் 1
- அடோல்ப் ஹிட்லருக்கு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றத்திற்காக ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. (ஆயினும் அவர் ஒன்பது மாதங்கள் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவித்தார்)
ஏப்ரல் 6
- இத்தாலியில் பாசிஸ்ட் கட்சி 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெறுகிறது.
ஜூன்
ஜூன் 10
- இத்தாலிய பாசிசவாதிகள் ரோமில் சோசலிச தலைவர் கியாகோமோ மட்டாட்டியை கடத்தி கொலை செய்கின்றனர்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 18
- பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்குகிறது.
1925
டிசம்பர்
டிசம்பர் 1
- முதல் உலகப்போரின் மேற்கு ஐரோப்பிய நேச நாடுகளுக்கும் முதல் உலகப்போருக்கு பிறகு புதிதாய் உருவான மத்திய மற்றும் கிழக்கு தேசங்களுக்கும் இடையில் லோகர்னோ உடன்படிக்கை கையெழுத்தானது.
1926
ஜனவரி
ஜனவரி 3
- தியோடோரோஸ் பங்காலாஸ் தன்னை கிரீசு நாட்டின் சர்வாதிகாரியாக அறிவித்துக் கொள்கிறார்.
ஜனவரி 31
- பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய துருப்புக்கள் ஜெர்மனியின் கோல்ன் பகுதியிலிருந்து வெளியேறுகின்றன.
ஏப்ரல்
ஏப்ரல் 4
- கிரீசு நாட்டின் சர்வாதிகாரி தியோடோரோஸ் பங்காலாஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஏப்ரல் 24
- ஜெர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே பெர்லின் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்படி இரண்டு நாடுகளில் எதாவது நாடு தாக்கப்பட்டால் அடுத்த நாடு நடுநிலை வகிக்கும்.
செப்டம்பர்
செப்டம்பர் 11
- ஸ்பெயின் உலக நாடுகள் அமைப்பை விட்டு விலகுகிறது.
1927
பிப்ரவரி
பிப்ரவரி 12
- பிரிட்டிஷ் துருப்புக்கள் ஷாங்காய் நகருக்குள் நுழைகின்றன.
பிப்ரவரி 19
- பிரிட்டிஷ் நிலைப்பாட்டை எதிர்த்து ஷாங்காய் நகரில் போராட்டங்கள் தொடங்குகின்றன.
மார்ச்
மார்ச் 10
- யுகோஸ்லாவியாவின் தாக்குதலை எதிர் பார்த்து அல்பேனியா தனது துருப்புக்களை எல்லை பகுதிகளுக்கு அனுப்புகிறது.
ஏப்ரல்
ஏப்ரல் 12
- சீன உள்நாட்டுப்போர் தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் இடையில் துவங்கியது.
மே
மே 20
- ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து சவூதி அரேபியா சுதந்திரம் பெறுகிறது.
மே 24
- ஐக்கிய ராஜ்ஜியம் சோவியத் ஒன்றியத்துடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து கொள்கிறது
ஜூன்
ஜூன் 4
- யுகோஸ்லாவியா அல்பேனியாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து கொள்கிறது
ஜூன் 7
- போலந்து நாட்டுக்கான சோவியத் தூதர் Pyotr Voykov படுகொலை செய்யப்படுகிறார்.
1928
மே
மே 3
ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இடையே ஜினான் நிகழ்வு தொடங்குகிறது.
ஜூன்
ஜூன் 4
ஹுவான்குடுன் ரயில் நிலையத்தில் சீன ஜனாதிபதி சாங் ஜுவோலின் ஜப்பான் உளவாளிகளால் படுகொலை செய்யப்படுகிறார்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் 2
இத்தாலியும் எத்தியோப்பியாவும் இத்தாலிய - எதியோப்பிய நல்லுறவு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
ஆகஸ்ட் 27
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே கெல்லாக் - பிரயன்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
1929
1930
1931
1932
1933
1934
1935
1936
1937
1938
1939
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.