இமைக்கா நொடிகள் (திரைப்படம்)
இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படமானது ஆர். அஜய் ஞானமுத்துவால் எழுதி, இயக்கி சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது.[1] அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆர். டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 30, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 இல் தொடங்கப்பட்டது.[2]
இமைக்கா நொடிகள் | |
---|---|
இயக்கம் | ஆர். அஜய் ஞானமுத்து |
தயாரிப்பு | சி. ஜெ. ஜெயக்குமார் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் (உரையாடல்) |
திரைக்கதை | ஆர். அஜய் ஞானமுத்து |
இசை | ஹிப்ஹாப் தமிழா |
நடிப்பு | அதர்வா நயன்தாரா அனுராக் காஷ்யப் ராஷி கன்னா |
ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
படத்தொகுப்பு | புவன் சீனிவாசன் |
கலையகம் | கேமியோ பிலிம்சு இந்தியா |
வெளியீடு | 30 அக்டோபர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அதர்வா - அர்ஜூனாக
- நயன்தாரா - அஞ்சலி விக்கிரமாதித்யன்
- அனுராக் காஷ்யப் - ருத்ராவாக
- ராஷி கன்னா - கிருத்தி
- இரமேசு திலக்
- தேவன்
- உதய் மகேசு
- விஜய் சேதுபதி - அஞ்சலியின் கணவராக
கதை
இப்படம் அதிரடி கதை கொண்ட காதல் படம் என்கிறார் ஆர். அஜய் ஞானமுத்து.[3]
படப்பணிகள்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டது. நம்ம மெட்ரோவின் சுரங்கங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரு நகரினை 25 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். மெட்ரோ தொடர்வண்டியின் சுரங்கப்பாதை மட்டும் இரண்டு இரவுகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது.[4] இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 17, 2017 இல் நிறைவுள்ளது.[5]
இசை
இத்திரைப்படத்தின் ஒரு பாடல் அக்டோபர் 2017இல் வெளியிடப்பட்டது. காதலிக்காதே என்னும் பாடலினை ஹிப்ஹாப் தமிழாவும், கௌசிக் கிரிசும் பாடியுள்ளனர்.
சான்றுகள்
- https://tamil.filmibeat.com/heroines/nayanthara-dominates-imaikkatha-nodigal-042478.html
- "Nayanthara signs Ajay Gnanamuthu`s `Imaikkaa Nodigal`". பார்த்த நாள் 15 September 2016.
- https://tamil.filmibeat.com/heroines/nayanthara-imaikkatha-nodigal-041992.html
- "Shooting in the metro tunnel". பார்த்த நாள் 11 December 2016.
- http://www.sify.com/movies/imaikkaa-nodigal-shoot-wrapped-up-news-tamil-rmsk4Wehicibg.html