இன்கா வேளாண்மை

பிற அமேரிக்க நாகரிகங்களை விட இன்கா மக்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தனர்.[1]

வேளாண்மை

மன்னர்

மன்னரே புதிய விவசாய நிலங்களை முதலாவதாக உழுது தொடங்கி வைப்பார். மன்னரால் பொன்னாலான் கலப்பையைக் கொண்டு செய்யப்படும் இந்நிகழ்ச்சி பொன்னேர் உழுதல் எனப்படும் (தமிழகத்திலும் இருந்தது).

இடம்

பெருவின் நிலங்கள் பெரும்பாலும் மலைச்சரிவுகளாகவே இருந்தன. இவற்றை படிப்படியான நிலங்களாக அமைத்து பயிரிட்டனர். நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஒவியம்

கலப்பைகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்தே உழுதனர். சிலர் உழும் போது கட்டிகளை உடைத்து நிலத்தைச் சரி செய்தனர். இக்காட்சிகள் இன்கா ஒவியங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

விழா

கோடையின் அறுவடை காலத்தில் இந்தி-ராமி என்ற விழா கொண்டாடப்பட்டது.[2] தமிழகத்தில் சிலப்பதிகார காலத்தில் இதை போன்று இந்திர விழா கொண்டாடப்பட்டது.

பிரிவுகள்

இன்கா வேளாண்மையில் நிலங்கள் பல பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது. இதில் கிடைக்கும் வருவாயும் அவ்வாறே பிரிக்கப்பட்டது.

எண்நிலத்தின் வகைபயன்
1.கடவுளுக்கான நிலங்கள்கோயில் வழிபாடு, விழாக்கள்
2.மன்னருக்கான நிலங்கள்ஆட்சி முறை
3.மக்களுக்கான நிலங்கள்பயிரிடுதல், மக்களின் சொந்த செலவுகள்
4.இடையருக்கான நிலங்கள்கால்நடை உணவு
5.நெசவாளர்களுக்கான நிலங்கள்மெகுவே நார்கள், பருத்தி மூலம் ஆடைகள் செய்தல்
6.வேயருக்கான நிலங்கள்காற்றாழை பொருட்களை கொண்டு வீடுகளை (கூரை) அமைத்தனர்

மற்ற பொருட்கள்

மேலும் மூலிகைச் செடிகள், அரிசி, ம்க்காச்சோளம், வாழை, கொக்கோ, கசாவா போன்ற பொருட்களை பயிரிட்டனர்.

மேற்கோள்

  1. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
  2. "the summer of rainy season come... Cuzco was now gay with arriving indians, for it was the sesaon of sun festival, the INTIRYAMI celebrating the time when, as the indians believed, the sun god came and live with them" - VictorW.Von Hagen, "HIGHWAY OF THE SUN"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.