இன்கா படை

இன்கா படை என்பது இன்கா பேரரசினைக் காக்கவும், அதன் எல்லையை விரிவுபடுத்தவும், எதிரிகளைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு பல் இனப் படையாகும். இன்கா பேரரசு வளர்ந்ததைப் போலவே அதன் படைபலமும் அதிகரித்தது. இன்கா பேரரசு அதன் உச்சத்தில் இருந்த போது இன்கா படையில் 2 இலட்சம் பேர் இருந்தனர்.

இன்கா படையில் போர் வீரர்கள் முக்கிய இடம் வகித்தனர். இவர்களுக்கு உணவு, உடை, மற்றும் உணவு உற்பத்தி, வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது குடும்பங்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இன்கா படையினர் போரில் வென்று தலைநகருக்குத் திரும்புகையில் பெண்களும் குழந்தைகளும் அவர்கள் வீரத்தினைப் போற்றி மரியாதை செய்தனர்.

கருவிகள்

இன்கா படையினர் தாங்கள் சார்ந்திருந்த இனத்திற்கேற்ப வெவ்வேறு வகையான எளிய ஆயுதங்களைக் கையாண்டனர்.

பாதுகாப்பு

  • தலைக்கவசம்
  • மார்புக்கவசம்

ஆயுதங்கள்

  • கோடாரிகள்
  • ஈட்டிகள்
  • போலா எனப்படும் நுனியில் கற்களைக் கொண்ட கயிறு
  • கவண்வில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.