இந்துகூர்ப்பேட்டை
இந்துக்கூர்ப்பேட்டை (Indukurpeta) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலம் மற்றும் கிராமம் ஆகும் இக்கிராமத்தைச் சுற்றிலும் நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் தூய்மையான நீர் நிரம்பிய குளங்களும் உள்ளன. மேலும், இக்கிராமத்தின் கிழக்குப் புறத்தில் வங்காள விரிகுடா கடல் சூழ்ந்துள்ளது. 7 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் மைபாடு கடற்கரை ஒரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது. அழகிய நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள இக்கடற்கரை பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஒரு சுற்றுலாத் தலமாகும்.[1]
இந்துக்கூர்ப்பேட்டை Indukurpeta | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
ஏற்றம் | 4 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
புவியியல் அமைப்பு
14.4500° வடக்கு 80.1333° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் இந்துக்கூர்ப்பேட்டை கிராமம் பரவியுள்ளது.[2] மேலும், கடல் மட்டத்தில் இருந்து 4 மீட்டர்கள் (16 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது
மேற்கோள்கள்
- "List of Sub-Districts". Census of India. பார்த்த நாள் 2007-03-26.
- Falling Rain Genomics.Indukurpet
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.