இதுலிபு

இத்லிப் (Idlib) (அரபு மொழி: إدلب, சிரியாவின் வடமேற்கில் அமைந்த இட்லிப் மாகாணம் மற்றும் இத்லிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் ஆகும். இது சிரியாவின் அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கில் 59 கிமீ தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இத்லிப்
إدلب
இத்லிப் நகரத்தை சுற்றி ஒலிவ மரங்கள் கொண்ட சமவெளி
இத்லிப்
இத்லிப்
Location of Idlib within Syria
ஆள்கூறுகள்: 35°56′N 36°38′E
நாடு சிரியா
மாகாணம்இட்லிப் மாகாணம்
மாவட்டம்இத்லிப்
மாநகராட்சிகள்சிரியா
ஏற்றம்500
மக்கள்தொகை (2010 census[1])
  மொத்தம்165
இனங்கள்இத்லிபியர்கள்
தொலைபேசி குறியீடு23
GeocodeC3871
தட்பவெப்பம்நடுநிலக்கடல் சார் வானிலை

சிரிய உள்நாட்டுப் போரின் போது இத்லிப் நகரத்தை, 2011-இல் சிரியாவின் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது. 2017-இல் இத்லிப் நகரத்தை மீண்டும் சிரியாவின் அரசுப் படைகள் கைப்பற்றியது.

2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இத்லிப் நகர மக்கள்தொகை 1,65,000 ஆகும். மக்களில் பெரும்பான்மையோர் சுன்னி முஸ்லீம்கள் ஆவார்.[2]இருப்பினும் அரபுக் கிறித்தவர்களும் சிறுபான்மையோராக வாழ்கின்றனர்.

இத்லிப் நகரத்தில் பண்டைய தொல்லியல் மேடுகள் உள்ளது. இங்கு கிமு 2350 காலத்திய பண்டைய எப்லா நகரம் விளங்கியது.[3]

வரலாறு

இத்லிப் நகரததின் அருகில் பைசாந்தியப் பேரரசின் கோயில்

ஆர்மீனிய இராச்சியத்தினர் சிரியா மீது போர் தொடுத்து இத்லிப் நகரத்தையும் கைப்பற்றினர். கிபி 64-இல் உரோமைப் பேரரசர் பாம்பே இத்லிப் நகரத்தை கைப்பற்றி சிரியாவை உரோமப் பேரரசுடன் இணைத்தார். பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இத்லிப் நகரத்தை, ஏழாம் நூற்றாண்டில் அரேபியர்கள் கைப்பற்றினர்.

உதுமானியப் பேரரசு

உதுமானியப் பேரரசு காலத்தில் கிபி 16 - 19-ஆம் நூற்றாண்டு வரை அலெப்போ மாகாணத்தின் ஒரு பகுதியாக இத்லிப் நகரம் விளங்கியது.[4]

சிரிய உள்நாட்டுப் போர்

2011 சிரிய உள்நாட்டுப் போரின் போது சிரிய கிளர்ச்சிப் படைகள் தற்காலிகமாக இத்லிப் நகரத்தை கைப்பற்றினர். 2012-இல் மீண்டும் சிரிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை கிளர்ச்சிப் படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது.

2015-இல் இசுலாமிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை கைப்பற்றினர்.[5][6]

சூன் 2019-இல் இத்லிப் நகரத்தில் பெரும் இசுலாமிய அரசுப் படைகள் களம் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்தது.[7]

சூலை 2019-இல் 20,000-30,000 வீரர்கள் கொண்ட அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் மற்றும் குர்திஸ்தான் கூட்டணிப் படைகள் இத்லிப் நகரத்தை சுற்றி வளைத்தது.[8]

26 அக்டோபர் 2019-இல் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், இத்லிப் நகரத்தின் வெளிபுறத்தில் உள்ள ஒரு பதுங்கு குழியில் பதுங்கியிருந்த இசுலாமிய அரசின் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதியை சுட்டுக் கொன்றனர்.[9][10][11]

தட்பவெப்பம்

இத்லிப் நகரம் தட்பவெப்பம் கொண்ட நடுநிலக்கடல் சார் வானிலையைச் சேர்ந்தது. இந்நகரத்தில் கோடைகாலம் கடும் வெப்பம் கொண்டதாக இருக்கும். [12] குளிர்காலத்தில் கடுமையான குளிரும், மழையும் காணப்படும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், இத்லிப்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 20
(68)
21
(70)
26
(79)
35
(95)
37
(99)
44
(111)
42
(108)
39
(102)
38
(100)
37
(99)
29
(84)
24
(75)
44
(111)
உயர் சராசரி °C (°F) 9.9
(49.8)
12.2
(54)
16.7
(62.1)
22.2
(72)
28.0
(82.4)
31.7
(89.1)
33.2
(91.8)
34.2
(93.6)
31.8
(89.2)
26.7
(80.1)
18.7
(65.7)
12.2
(54)
23.13
(73.63)
தினசரி சராசரி °C (°F) 6.2
(43.2)
7.7
(45.9)
11.3
(52.3)
15.8
(60.4)
20.9
(69.6)
25.0
(77)
27.5
(81.5)
27.8
(82)
25.1
(77.2)
20.0
(68)
13.0
(55.4)
8.1
(46.6)
17.37
(63.26)
தாழ் சராசரி °C (°F) 2.5
(36.5)
3.2
(37.8)
6.0
(42.8)
9.5
(49.1)
13.8
(56.8)
18.4
(65.1)
21.0
(69.8)
21.4
(70.5)
18.4
(65.1)
13.4
(56.1)
7.4
(45.3)
4.0
(39.2)
11.58
(52.85)
பதியப்பட்ட தாழ் °C (°F) -5
(23)
-5
(23)
1
(34)
1
(34)
8
(46)
15
(59)
18
(64)
20
(68)
13
(55)
3
(37)
-4
(25)
-5
(23)
-5
(23)
பொழிவு mm (inches) 97
(3.82)
88
(3.46)
59
(2.32)
41
(1.61)
18
(0.71)
5
(0.2)
0
(0)
0
(0)
6
(0.24)
25
(0.98)
41
(1.61)
93
(3.66)
473
(18.62)
Source #1: Climate-Data.org (altitude: 432m)[12]
Source #2: Voodoo Skies for record temperatures[13]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.