இ. எம். பிராஸ்டர்
எட்வேர்டு மார்கன் பிராஸ்டர் (Edward Morgan Forster) (1 சனவரி 1879 - 7 சூன் 1970) இங்கிலாந்தைச் சார்ந்த புதினம், சிறுகதை மற்றும் கட்டுரை எழுத்தாளர். இவரது பல புதினங்கள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பிரித்தானிய சமுதாய மக்களிடையே உள்ள வகுப்புவாத பிரிவினைகள் மற்றும் போலித்தனம் பற்றி எழுதப்பட்டவை. குறிப்பிடும்படியான இவரது புதினங்கள்: ஒரு அறைப் பற்றிய பார்வை (1908) (A Room with a View), ஹோவார்ட்ஸ் முடிவு (Howards End) (1910) மற்றும் இந்தியாவிற்கு ஒரு பாதை (A Passage to India) (1924). இந்தப் புதினங்கள் மூலம் பிராஸ்டர் பெரும் புகழ் பெற்றார். மேலும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு 16 பல்வேறு ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.[1][2]
இ. எம். பிராஸ்டர் | |
---|---|
![]() இ. எம். பிராஸ்டர், 1924–1925 | |
தொழில் | எழுத்தாளர்(புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள்) |
நாடு | ஆங்கிலம் |
கல்வி | டோம் பிரிட்ஜ் பள்ளி |
கல்வி நிலையம் | கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ச், கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம் |
எழுதிய காலம் | 1901–1970 |
இலக்கிய வகை | யதார்தம், குறியீடு, நவீனம் |
கருப்பொருட்கள் | வகுப்புவாதம், பாலினம், ஓரினச்சேர்கை |
கையொப்பம் | ![]() |
ஆரம்ப வருடங்கள்
பிராஸ்டர் ஒரு ஆங்கிலோ-ஐரிஸ் மற்றும் வேல்ஸ் இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு, 6, மெல்கோம்பி, டோர்செட் சதுக்கம், லண்டன் NW1 என்ற இடத்தில் பிறந்தார். அலிசா கிளாரா மற்றும் எட்வேர்டு மார்கன் லிவீலின் பிராஸ்டர் ஆகியோரின் ஒரே மகன். இவரது தந்தை ஒரு கட்டிட கலைஞர். அதிகாரப்பூர்வ பெயர் ஹென்றி மார்கன் பிராஸ்டர். திருச்சபையில் இவருக்கு பெயரிடும் போது எட்வேர்டு மார்கன் பிராஸ்டர் என்று பெயரிட்டனர்.[3] அதனால் தந்தை பெயரோடு குழப்பாமல் இருக்க அனைவரும் இவரை மார்கன் என்றே அழைத்தனர். இவரது தந்தை காச நோயால் 30 அக்டோபர் 1880 ஆம் ஆண்டில் மார்கனின் இரண்டாவது அகவையில் இறந்தார்.[4] 1883 ஆம் ஆண்டில் பிராஸ்டர் மற்றும் அவரது தாயார் ரூக்நெஸ்ட், ஸ்டீபனேஜ், ஹெர்ட்போர்டுசயருக்கு குடி பெயர்ந்தனர். இந்த வீடு, ஹோவார்ட்ஸ் முடிவு என்ற புதினத்தில் வரும் வீட்டின் மாதிரியாக இருந்தது. ஏனெனில் இங்கு தான் பிராஸ்டர் தன் முழு குழந்தைப் பருவத்தையும் செலவிட்டார்.
மேற்கோள்கள்
- "Edward M Forster". Nomination Database. Nobel Media. மூல முகவரியிலிருந்து 2015-04-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-04-05.
- "E Forster". Nomination Database. Nobel Media. மூல முகவரியிலிருந்து 2014-10-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-10-26.
- Moffatt, p. 26
- AP Central – English Literature Author: E. M. Forster. Apcentral.collegeboard.com (18 January 2012). Retrieved on 10 June 2012.