லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)

ஆத்திரேலிய லிபரல் கட்சி (Liberal Party of Australia) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.

ஆத்திரேலிய லிபரல் கட்சி
Liberal Party of Australia
தலைவர்மால்கம் டேர்ன்புல்
துணைத் தலைவர்ஜூலி பிசொப்
குறிக்கோளுரைவேலைகளும் வளர்ச்சியும்
தொடக்கம்31 ஆகத்து 1945 (1945-08-31)
முன்னர்ஐக்கிய ஆத்திரேலியா கட்சி
தலைமையகம்பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
இளைஞர் அமைப்புஇளம் லிபரல்கள்
உறுப்பினர்80,000[1]
தேசியக் கூட்டணிலிபரல்-தேசிய கூட்டமைப்பு
பன்னாட்டு சார்புபன்னாட்டு சனநாயக ஒன்றியம்,
ஐரோப்பிய பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் கூட்டமைப்பு[2]
நிறங்கள்     நீலம்
பிரதிநிதிகள் அவை
60 / 150
மேலவை
23 / 76
மாநில முதலமைச்சர்கள்
2 / 8
மாநில கீழவை உறுப்பினர்கள்
156 / 401
மாநில மேலவை உறுப்பினர்கள்
53 / 155
பிராந்திய உறுப்பினர்கள்
11 / 50
இணையதளம்
www.liberal.org.au

ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு 1943 இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட்சி ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியுடன் ஆட்சிக்காகப் போட்டியிடுகிறது. நடுவண் அரசியலில் 1983 இலிருந்து எதிர்க் கட்சியாக இருந்த லிபரல் கட்சி 1996 இல் பெரும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றது. நவம்பர் 24, 2007 தேர்தலில் தொழிற் கட்சியிடம் இக்கூட்டணி பெரும் தோல்வி கண்டது. மாநில அளவில் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆறு மாநிலங்களிலும் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Our Structure". Liberal Party of Australia. பார்த்த நாள் 17 May 2014.
  2. "ACRE - EUROPE'S FASTEST GROWING POLITICAL MOVEMENT".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.