ஆர்னல்டு கெசெல்

ஆர்னல்டு லூசியசு கெசெல் (Arnold Lucius Gesell) ஒரு அமெரிக்க மருத்துவ உளவியலாளர், குழந்தை மருத்துவர், யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார்.[2] இவர் குழந்தை வளர்ச்சியில் பல ஆராய்ச்சிகள் செய்து பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.

ஆர்னல்டு கெசெல்
Dr. Arnold Gesell
பிறப்புஆர்னல்டு லூசியசு கெசெல்
சூன் 21, 1880(1880-06-21)
அல்மா, விஸ்கொன்சின், அமெரிக்கா
இறப்புமே 29, 1961(1961-05-29) (அகவை 80)
நியூ ஏவன், கனெடிகட், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமருத்துவ உளவியல்
பணியிடங்கள்யேல் குழந்தைகள் குறித்த கல்வி அமைப்பு,[1] யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
யேல் பல்கலைக்கழகம்
கிளார்க் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுழந்தைகள் வளர்ச்சி குறித்த ஆய்வு

ஆரம்பகால வாழ்க்கை

இவர் விஸ்கான்சின், ஆல்மா என்னுமிடத்தில் பிறந்தவா். தமக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் “The Village of Thousand Souls” என்னும் புத்தகத்தை எழுதினாா். அா்னால்டின் தந்தை ஒரு நிழற்படக் கலைஞா், தாயாா் ஒரு பள்ளி ஆசிரியா் ஆவார்[3] . இவா் ஐந்து சகோதர சகோதரிகளுடன் பிறந்தவா். இவா் பள்ளியில் படிக்கும் பொழுதே தமது இளைய சகோதரி வளா்வதைக் கவனித்து வந்தவா். பள்ளிப் பருவம் முடித்த பின் விஸ்கோன்ஸின் கல்லூரியில் மேல்படிப்பைத் தொடா்வதற்கு முன் ஒரு உயா்நிலைப் பள்ளியில் ஆசிாியராகப் பணிபுாிந்தாா். பின் பல்கலைக் கழகத்தில் பேராசிரியா் பிரட்ரிக் ஜாக்சனிடம் சரித்திரமும் பேராசிரியா் ஜோசப் ஜாஸ்ட்ரோவிடம் உளவியலும் கற்று 1903 ஆம் ஆண்டு தம் பட்டப் படிப்பை முடித்தாா். விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் எட்கர் ஜேம்ஸ் ச்விப்ட் என்னும் பேராசிரியர் கற்றுக்கொடுத்த ஒரு பாடம்தான் ஜி செல்லை உளவியலில் ஆர்வமுடையவராகத் தூண்டியது என்று கூறப்படுகிறது

பணிக்காலம்

ஜிசெல் கிளாா்க் பல்கலைக் கழகத்தில் உளவியல் முனைவா் பட்டம் பெறுவதற்கு முன் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும், முதல்வராகவும் பணிபுாிந்தாா். இந்தப் பல்கலைக் கழகத்தில் தான் ஜி ஸ்டான்லி ஹால் குழந்தைகள் குறித்த படிப்பிற்காக ஒரு இயக்கத்தை துவக்கி இருந்தாா்[4] . கிளாா்க் பல்கலைக் கழகத்தில் 1906 ஆம் ஆண்டு அா்னால்டு முனைவா் பட்டம் பெற்றாா். லாஸ் ஏன்ஜல்ஸ் அரசு பள்ளி (இன்றைய கலிபோா்னியா பல்கலைக் கழகம்)-யில் பேராசியராகப் பொறுப்பேற்கும் முன் நியூயாா்க் நகரிலும், விஸ்கான்சின் பள்ளியிலும் பல இடங்களில் கல்வி தொடா்பான பணியாற்றியுள்ளார்.

மன நோயுற்ற குழந்தைகள் பள்ளியில் சில காலம் ஜிசெல், குழந்தைகளின் இயலாமையின் காரணத்தையும் அதற்கான தீா்வையும் அறிவதில் ஆா்வம் கொண்டிருந்தார். உளவியலைப் பற்றி மேலும் நன்கு கற்க விழைந்து விஸ்கோன்ஸின் மருத்துவப் பள்ளியில் கல்வியைத் தொடா்ந்தாா்[5] . மருத்துவப் படிப்பைத் தொடா்ந்துக் கொண்டே யேல் பல்கலைக் கழகத்தில் மருத்துவ உதவிப் பேராசிாியராகப் பணிபுாிந்தாா்[6] . அங்கு குழந்தை வளா்ச்சி குறித்த மருத்துவ மனை ஒன்றை நிறுவினார். மருத்துவத்தில் பட்டமேற்படிப்பையும் முடித்தாா். அதன்பின் யேல் பல்கலைக் கழகத்தில் முழுநேரப் பேராசிரியா் ஆனாா்.

ஜிசெல் கனக்டிகட் அரசுப் பள்ளி வாரியத்தில் உளவியலாளராகப் பணிபுாிந்து இயலாக் குழந்தைகள் நன்கு கல்வி கற்கப் பணி புரிந்தாா். இந்த முக்கியமான நியமனம் தான் அமொிக்க நாட்டின் முதல் பள்ளி உளவியலாளா் என்னும் பெருமையை இவருக்கு பெற்றுத் தந்தது. இவா் ‘The Pre School Child from the Standpoint of Public Hygiene and Education' (1923), 'The Mental Growth of the Pre School Child' (1925) (இது திரைப்படமாகவும் வெளிவந்தது), 'An Atlas of Infant Behaviour' (குழந்தைகள் வளா்ச்சியில் ஒரு சில நிலைகளை நிா்ணம் செய்து) (1934), போன்ற புத்தகங்களை எழுதினாா். இவா் ‘பிரான்ஸிஸ் இல்ங்’ அவா்களுடன் இணைந்து குழந்தை வளா்ப்பு வழிகாட்டி நூலாக 'Infant and the Child in the Culture of Today' (1943) மற்றும் 'The child from Five to Ten' (1946) என்னும் நூல்களையும் எழுதியுள்ளாா்.

ஜிசெல் தமது ஆராய்ச்சியில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார். காணொலி மற்றும் நிழற்படத்தின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார். அது போலவே குழந்தைகளை அவர்கள் அறியாமலேயே அவா்களைக் கூா்ந்து நோக்குவதற்கு ஒரு கண்ணாடிக் கோளத்தைப் பயன்படுத்தியுள்ளார். இவா் குழந்தைகள் குறித்து பல ஆராய்ச்சிகளையும், மிருகங்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் செய்துள்ளர். இவர் ஒரு உளவியலாளராக, குழந்தைகளுக்கு இயற்கயைாகவே திறமை உள்ளது, அல்லது அது சூழ்நிலையின் தாக்கம் என்ற இரண்டு அணுகுமுரைகளின் முக்கியத்துவம் குறித்து எழுதியும் பேசியும் வந்தார். மன நோய் குறித்த எந்த முடிவிற்கும் உடனடியாக வரவேண்டாம் எனவும் குழந்தைகள் நடத்தையில் பல அம்சங்கள் பரம்பரையாக வருவன என்றும் கூறிவந்தார். குழந்தைகள் பெற்றொர்களிடமும், தங்களுக்குள்ளாகவும் அனுசரித்துப் போகும் பழக்கம் உடையவை என்று குறிப்பிட்டுள்ளார். அமொிக்க நாடு முழுவதும் மழலையா் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.

ஜிசெல்லின் கருத்துக்கள் ‘ஜிசெல்லின் குழந்தை வளா்ப்பில் முதிா்ச்சியடைதல் கோட்பாடு’ [6][7](Ge Sell’s Maturational Theory of Child Development) என்றழைக்கப்பட்டது. இக்கோட்பாட்டின் அடிப்படையில் இவா் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். ஜிசெல்லின் நினைவாக இவா் 1948 ஆண்டு ஓய்வு பெற்ற பின், ‘ஜிசெல் மனித மேம்பாட்டு நிறுவனம்’ என்னும் பெயாில் அவருடன் பணி புாிந்தவா்கள் துவங்கியுள்ளனர்[8]. இவர் 1961 ஆம் ஆண்டு நியூ ஹெவன் என்னும் இடத்தில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. "Our History > Child Study Center - Yale School of Medicine".
  2. Herman, E (2001), "Families made by science. Arnold Gesell and the technologies of modern child adoption.", Isis; an international review devoted to the history of science and its cultural influences 92 (4): 684–715, Dec 2001, doi:10.1086/385355, பப்மெட்:11921680
  3. Hannan, Caryn (2008). Wisconsin biographical dictionary (2008-2009 ). Hamburg, MI: State History Publications. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-878592-63-7.
  4. William Kessen (July 1983). History, theory, and methods. Wiley. பக். 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-09057-1. https://books.google.com/books?id=nzkNAQAAMAAJ.
  5. William C. Crain (March 1980). Theories of development: concepts and applications. Prentice-Hall. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-913566-8. https://books.google.com/books?id=HXRqAAAAMAAJ.
  6. Neil J Salkind (22 January 2004). An Introduction to Theories of Human Development. SAGE Publications. பக். 59–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-2639-9. https://books.google.com/books?id=4U8cBEwv8OAC&pg=PA59.
  7. Encyclopedia of Human Ecology: A-H. ABC-CLIO. பக். 338–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-852-5. https://books.google.com/books?id=rPcwuEe9MBQC&pg=PA338.
  8. "Child Specialist Dies". The Kansas City Times: p. 28. May 30, 1961. https://www.newspapers.com/clip/3657714/arnold_gesell_18801961/. பார்த்த நாள்: November 19, 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.