ஆர்க்கிட்

ஆர்க்கிட் அல்லது ஓக்கிட் (Orchids) என்பது ஒரு வித்திலையைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரக் குடும்பம் ஆகும்.இது தமிழில் மந்தாரை என்று அழைக்கப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 21,950 முதல் 26,049 வரை ஏற்பு பெற்ற சிற்றினங்கள் உள்ளன. அதாவது இவற்றின் எண்ணிக்கை உலகில் உள்ள பறவை இனங்களை விட இருமடங்கு அதிகம். ஆர்க்கிடுகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. மந்தாரை சிங்கப்பூரின் தேசிய மலர் ஆகும்.

ஆர்க்க்கிடே
புதைப்படிவ காலம்:80 Ma
PreЄ
Pg
N
Late Cretaceous - Recent
Color plate from ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்'s Kunstformen der Natur
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
வரிசை: Asparagales
குடும்பம்: ஆர்க்கிடே
Juss.
துணைக்குடும்பங்கள்
  • Apostasioideae Horaninov
  • Cypripedioideae Kosteletzky
  • Epidendroideae Kosteletzky
  • Orchidoideae Eaton
  • Vanilloideae Szlachetko
ஆர்க்கிடே குடும்பத் தாவரங்களின் பரவல்

ஆர்கிட்டானது மலர்ந்த பின் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இவை உலகின் எல்லா வகையான வாழிடங்களில் பல வகையில் இருக்கிறன. பல ஆர்கிடுகள், மரத்தைத் தொற்றிக்கொண்டு கொடிபோல் வளரும். சில வகை, தரையில் இருக்கும். இதுவரை 28 ஆயிரம் வகை ஆர்கிட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. சு. தியடோர் பாஸ்கரன் (2018 அக்டோபர் 13). "மாய மலரைத் தேடி...". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 அக்டோபர் 2018.

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.