இரா. நாகசாமி

இராமச்சந்திரன் நாகசாமி (Ramachandran Nagaswamy) (பிறப்பு: 10 ஆகஸ்டு 1930) இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் ஆவார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதை வழங்கியது.[1]

இராமச்சந்திரன் நாகசாமி
ஆர். நாகசாமி
பிறப்பு10 ஆகஸ்டு 1930
தாக்கம் 
செலுத்தியோர்
க. அ. நீலகண்ட சாத்திரி
டி. என். இராமச்சந்திரன்

இளமை வாழ்க்கை

சமசுகிருத வித்துவான் இராமச்சந்திரனுக்கு 10 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர் நாகசாமி[2][3] ஆர். நாகசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருத மொழியில் முதுநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்.[2]டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.[2]

அரசுப் பணி

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963 முடிய சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக (curator) பணியில் சேர்ந்தார்.[2]] 1963 முதல் 1966 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988 முடிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராக இருந்தவர்.

படைப்புகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. ஷங்கர் (2018 பெப்ரவரி 6). "உண்மை மட்டுமே வரலாறு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 8 பெப்ரவரி 2018.
  2. "Biodata of R. Nagaswamy". Tamil Arts Academy.
  3. Kausalya Santhanam (24 February 1995). "The Achievers". The Hindu.
  4. https://www.amazon.in/Books-R-Nagaswamy/s?ie=UTF8&page=1&rh=n%3A976389031%2Cp_27%3AR%20Nagaswamy
  5. http://tamilartsacademy.com/

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.