ஆபிரிக்கான மொழி

ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் (Afrikaans) என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப்படுகிறது. அதை விட பொட்சுவானா, அங்கோலா, சுவாசிலாந்து, சிம்பாப்வே, லெசத்தோ, சாம்பியா மற்றும் ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் சிறுபான்மையோர் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 100,000 ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.[2].

ஆபிரிக்கான மொழி
நாடு(கள்)தென்னாபிரிக்கா
நமீபியா
பிராந்தியம்தெற்கு ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
அண். 6.44 மில்லியன் (வீட்டு மொழி)
6.75 மில்லியன் (இரண்டாம் அல்லது மூன்றாம் மொழி)
12 முதல் 16 மில்லியன் (அடிப்படை மொழி அறிவு) அக்டோபர் 2007 [1]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தென்னாபிரிக்கா
Regulated byDie Taalkommissie
(தென்னாபிரிக்க அறிவியல் மற்றும் கலை அகடமி கமிஷன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1af
ISO 639-2afr
ISO 639-3afr

புவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது.

ஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து "கேப் டச்சு" என்ற பெயரில் உருவானது. இம்மொழி "ஆபிரிக்க டச்சு" அல்லது "சமையலறை டச்சு" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது.

ஆபிரிக்கான மொழியின் வகைகள்

கிழக்கு கடல்முனை ஆபிரிக்கானசு(Oosgrensafrikaans)

கடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans)

ஆரஞ்சு ஆறு ஆபிரிக்கானசு(Oranjerivierafrikaans)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.