ஆனந்தூர்

ஆனந்தூர், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வருவாய் வட்டத்தில், இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகளில் ஒன்றாகும்.

ஆனந்தூர், திருவாடானையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அருகே அமைந்த பேரூராட்சி இராஜசிங்கமங்கலம் ஆகும். 928.79 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆனந்தூர் கிராமத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3,605 ஆகும். இக்கிராமத்தில் 833 வீடுகள் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 623401ஆகும். [1]

தொல்பொருள்

ஆனந்தூர் அருகே அமைந்த சமந்தவயலில், கிபி 11ம் நூற்றாண்டு காலத்திய கௌதம புத்தர் சிற்பம் 2015ல் கண்டெடுக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

  1. Anandur
  2. Stone idol of Buddha unearthed
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.