ஆண்டாள் பிரியதர்சினி

ஆண்டாள் பிரியதர்சினி அல்லது ஆண்டாள் பிரியதர்சினி (Andal Priyadarshini) ஒரு தமிழ் மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும் ஆவார். தற்போது அவர் கோயம்புத்தூர் பொதிகை தொலைக்காட்சி ஒளியலை வரிசையின் தலைமை செயலராகப் பணியாற்றி வருகிறார்[1][2]. தற்கால பெண் படைப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

கவி செம்மல் மற்றும் எழுத்துலக சிற்பி என்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டது.[3].சென்னை சிறீ சாரதா வித்யாலயா பள்ளியில் படித்தார், அப்பள்ளியில் சிறந்த மாணவர் விருது பெற்றார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் 05.10.1962 அன்று பிறந்தார். பெற்றோர்:கவிஞர் ஆ.கணபதி புலவர் - சுப்புலட்சுமி. சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் கல்லூரிப் படிப்பும் முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்டமும் ஆங்கில இலக்கியத்தில் பெற்றுள்ளார். இவரின் கணவர் கவிஞர் பால ரமணி ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

படைப்புகள்

கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, திறனாய்வு என இதுவரை பல படைப்புகளைப் படைத்துள்ளார்.

புத்தகங்கள்

  • சுருதி பிசகாத வீணை
  • விடிவைத் தேடி
  • புதிய திருப்பாவை

புதினங்கள்

  1. தகனம்
  2. கனவுகள் கைப்பிடிக்குள்
  3. முதல் ஒளிபரப்பு ஆரம்பம்
  4. தாளம் தப்பிய தாலாட்டு

குறும் புதினங்கள்

  1. சிகரம்சிலந்திக்கும் எட்டும்
  2. கதாநாயகி
  3. சாருலதா
  4. வேடிக்கை மனிதர்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  1. சுருதி பிசகாத வீணை
  2. ரிஷிமு்மனுஷீயும்
  3. தோஷம்
  4. தலைமுறைதாகம்
  5. பெருமூச்சின் நீளம்

கவிதைத் தொகுப்புகள்

  1. புதிய திருப்பாவை
  2. சுயம் பேசும் கிளி
  3. முத்தங்கள் தீர்ந்துவிட்டன
  4. சூரியனை விடிய வைப்போம்
  5. தோகையெல்லாம் துப்பாக்கிகள்

கட்டுரைகள்

  1. பெண் எழுத்து
  2. விடிவைத்தேடி
  3. தேசம் மிச்சமிருக்கும்

விருதுகள்

  1. கவிதைகளுக்காக 2000ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து விருது
  2. தோஷம் சிறுகதைக்காக லில்லி தேவசிகாமணி விருது
  3. உண்டியல் கதைக்காக பாவலர் முத்துசாமி விருது
  4. கழிவு சிறுகதைக்காக இலக்கியச்சிந்தனை விருது
  5. சுயம்பேசும் கிளி கவிதைத் தொகுப்பிற்காக நாகப்பன் ராஜம்மாள் விருது
  6. துகனம் புதினத்திற்காக காசியூர் ரங்கம்மாள் விருது
  7. அவனின் திருமதி, தீ, தோஷம் சிறுகதைகள் ஆனந்தவிகடன் வைரவிழாவில் 5000ரூ ஒவ்வொன்றும் பரிசு பெற்றன
  8. தினமணி புத்தக கண்காட்சியில் 3000ரூ பரிசு
  9. சாணஅடுப்பும்,சூரிய அடுப்பும் இந்திய அரசின் பரிசு பெற்றது

பட்டங்கள்

  1. நெல்லை இலக்கிய வட்டம் எழுத்துலகச்சிற்பி பட்டம் வழங்கியுள்ளது.
  2. தேனீஇலக்கிய கழகம் கவிச்செம்மல்.

சிறப்புகள்

  1. 2003ல் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததின விழாவில் அன்றைய இந்தியக் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தலைமையில் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார்.
  2. சாகித்ய அகாதமி பெண்படைப்பாளர் படைப்புகள் தொகுதியில் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
  3. பெண்கவிஞர்களின் தொகுப்புநூலான பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பில் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது.

பாடநூல்களில் படைப்புகள்

  1. வானவில் வாழ்க்கை ஸ்டெல்லாமேரி கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  2. கதாநாயகி கேரளா பல்கலைக்கழகத்தில் பள்ளி இறுதிவகுப்பிற்குப் பாடத்திட்டமாக உள்ளது.
  3. தகனம் திருச்சி ஜெயின்ட்ஜோசப் கல்லூரியில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.