ஆக்டீன்

ஆக்டீன் (Octene) என்பது C8H16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது ஆல்க்கீன் என்ற வகைப்பாட்டில் இடம்பெறுகிறது. மாற்றியச் சேர்மத்திம் கார்பன் சங்கிலியில் இரட்டைப் பிணைப்பின் அமைவிடம் மற்றும் வடிவியலைப் பொருத்து ஆக்டீனுக்கு பல்வேறு எண்னிக்கையில் மாற்றியங்கள் உண்டாகின்றன.

1-ஆக்டீன்

ஆக்டீனின் மிக எளிய மாற்றியம் 1-ஆக்டீன் ஆகும். இந்த ஆல்பா-ஒலிபீன் இணை-ஒருபடியாகக் கரைசல் பலபடியாக்கச் செயல்முறையில் பாலியெத்திலீன் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆக்டீனின் பயனுள்ள பல கட்டமைப்பு மாற்றியங்கள் ஐசோபியூட்டீன் மற்றும் 1-பியூட்டீன் ஆகியனவற்றை இருபடியாக்கம் செய்வதன் வழியாகத் தயாரிக்கப்படுகின்றன. இக்கிளைச் சங்கிலி ஆல்க்கீன்கள் பீனால்களை ஆல்கைலேற்றும் முறையில் அழுக்கு நீக்கிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களைத் தருகின்றன[1].

மேற்கோள்கள்

  1. Helmut Fiege, Heinz-Werner Voges, Toshikazu Hamamoto, Sumio Umemura, Tadao Iwata, Hisaya Miki, Yasuhiro Fujita, Hans-Josef Buysch, Dorothea Garbe, Wilfried Paulus "Phenol Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a19_313.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.