ஆல்பா-ஒலிபீன்

ஆல்பா-ஒலிபீன்கள் (Alpha-olefins) என்பவை CxH2x என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் ஆகும். ஆல்க்கீன்களான இவற்றை α-ஒலிபீன்கள் என்றும் எழுதுவர். இக்குடும்பத்தைச் சேர்ந்த சேர்மங்களில் இரட்டைப் பிணைப்பானது ஆல்பா நிலையில் அல்லது முதன்மை நிலையில் காணப்படும்[1]. இரட்டைப் பிணைப்பின் இந்த இருப்பிடம் சேர்மத்தின் வினைத்திறனை அதிகரிக்கிறது என்பதோடு பலவிதமான பயன்பாடுகளுக்கும் காரணமாகிறது.

எக்சு-1-யீன் ஒரு குறிப்பிடத்தக்க ஆல்பா-ஒலிபீனாகும்.
மூலக்கூறில் உள்ள அணுக்களின் வரிசையை நீலநிற எண்கள் ஐயுபிஏசி முறையில் காட்டுகின்றன. சிவப்புக் குறியீடுகள் பிரதான சங்கிலியின் அணுக்களை பொதுப் பெயரிடும் முறையில் காட்டுகின்றன. ஆல்பா-ஒலிபீனின் இரட்டைப் பிணைப்பானது #1 மற்றும் #2 (ஐயுபிஏசி) நிலைகளுக்கு இடையில் அல்லது α மற்றும் β (பொது) கார்பன்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

வகைப்பாடு

ஆல்பா ஒலிபீன்கள் நேரியல் ஆல்பா ஒலிபீன்கள், கிளைச்சங்கிலி ஆல்பா ஒலிபீன்கள் என்ற இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சேர்மத்தின் இரண்டாவது கார்பன் (வினைலிடின்) அல்லது மூன்றாவது கார்பனுடன் கிளைச்சங்கிலி இணைப்புள்ள ஆல்பாஒலிபீன் சேர்மத்தின் வேதிப்பண்புகள் நேரியல் ஆல்பா ஒலிபீனின் வேதிப்பண்புகளிலிருந்தும் நான்காவது கார்பன் மற்றும் அதற்கடுத்த கார்பன் அணுக்களில் கிளைச்சங்கிலி ஆல்பா ஒலிபீன்களின் வேதிப்பண்புகளிலிருந்தும் குறிப்பிடத்தக்கவகையில் மாறுபடுகின்றன.

உதாரணங்கள்

நேரியல் ஆல்பா ஒலிபீனுக்கு உதாரணமாக புரோப்பீன், 1-பியூட்டீன், 1-டெசீன் ஆகியனவற்றைக் கூறலாம்.. கிளைச்சங்கிலி ஆல்பாஒலிபீனுக்கு ஐசோபியூட்டைலீன் சேர்மத்தை உதாரணமாகக் கூறலாம்.

மேற்கோள்கள்

  1. Petrochemicals in Nontechnical Language, 3rd Edition, Donald L. Burdick and William L. Leffler, ISBN 978-0-87814-798-4
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.