அஷ்ட விநாயகர்

அஷ்ட விநாயகர் அல்லது எட்டு விநாயகர் (Ashtavinayaka) (மராத்தி: अष्टविनायक) எனப்படும் எட்டு விநாயகர்கள் தடைகளை விலக்கி ஒற்றுமை, செல்வம், கல்வி, அறிவு அருள்பவர் எனப் பொருளாகும். இந்திய மாநிலமான மகாராட்டிரா புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் எட்டு விநாயர் கோயிலைக் குறிக்கிறது. இந்த மூன்று மாவட்டங்களில் அமைந்திருக்கும் விநாயகர் வடிவங்கள் மற்றும் தும்பிக்கை அமைப்புகள் சற்று வேறுபட்டிருக்கும். இந்த எட்டு விநாயகர் கோயில்களுக்கும் கால்நடையாகச் சென்று வழிபடுவது மராத்தியர்களின் வழக்கமாகும். [1]அஷ்டவிநாயக மூர்த்திகளும் தானாக தோன்றிய சுயம்பு மூர்த்திகளாகும். [2]

மகாராட்டிராவில் அஷ்டவிநாயகர்கள்

எட்டு விநாயகர் கோயில்கள்

மகாராட்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் கோயில்களின் பெயர்களும்; குடிகொண்ட இடங்களும்:

அஷ்டவிநாயகர் கோயில்கள்
# பெயர் அமைவிடம்
1 மோரேஷ்வர் மோர்கோன், புனே மாவட்டம்
2 சித்தி விநாயகர் கோயில் சித்தேடெக், அகமது நகர் மாவட்டம்
3 பல்லாலேஷ்வர் பாலி, ராய்கட் மாவட்டம்
4 வரதவிநாயகர் மகாத், ராய்கட் மாவட்டம்
5 சிந்தாமணி விநாயகர் தேயுர், புனே மாவட்டம்
6 லெண்யாத்திரி கணபதி குடைவரைக் கோயில் லெண்யாத்திரி, புனே மாவட்டம்
7 விக்னேஸ்வரர் கோயில் ஒதர், நாசிக் மாவட்டம்
8 ரஞ்சன்கோண் கணபதி ரஞ்சன்கோண், புனே மாவட்டம்

மோர்கவோன் கணேசர் ஆலயத்திலிருந்து பாதயாத்திரையைத் துவக்கி, பின்னர் சித்திவிநாயகர் கோயில், பல்லாலேஷ்வர் விநாயகர் கோயில், வரதவிநாயகர் கோயில், சிந்தாமணி விநாயகர் கோயில், லேணாத்திரி விநாயகர் கோயில், விக்னேஸ்வரர் கோயில் வழியாக ரஞ்சன்கோன் கணபதியை வழிபட்டு மீண்டும் மோர்கவோன் கணேசரை வழிபட்டு பாதயாத்திரையை முடிப்பது பக்தர்களின் மரபாகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Ashtavinayak Darshan". பார்த்த நாள் 8 September 2015.
  2. "Ashtavinayak Temples".
  • GaneshPurana (old script)
  • Ashtavinayak Darshan by Ed. Hemangi Rele
  • Maharashtratil Paryatan Sthale by Maharashtra State Tourism Development Corporation
  • D. G. Godse's essay "Ashtavinayak" from his book "Samande Talāśa" समंदे तलाश (Sreevidya Prakashan 1981)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.