அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Chettiar College of Engineering and Technology) தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

நிறுவல்:1952
வகை:அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரி
அமைவிடம்:காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:http://www.accet.net

வரலாற்றுக் காலக்கோடு

  • இக்கல்லூரி 1952, ஜூலை 21-ஆம் நாள் தொடங்கப் பெற்றது.
  • கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
  • 1966 ஆம் ஆண்டு இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) தொடங்கப்பட்டது.
  • 1988-ஆம் ஆண்டு கணிப்பொறி பயன்பாட்டியல் (Computer Application) பட்டமேற்படிப்பு (MCA) தொடங்கப்பட்டது.
  • 2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) தொடங்கப்பட்டது.
  • 2008-2009-ஆம் கல்வியாண்டு முதல் தன்னாட்சி கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.