அழகசுந்தரம்

அழகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட பிரான்சிஸ் கிங்ஸ்பரி (Francis Kingsbury, 1873 - 1941) யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் புதல்வர்.[1] பின்னாளில் கிறித்தவ மதத்தைத் தழுவிய இவர் திருமுழுக்கின் போது பிரான்சிஸ் கிங்ஸ்பரி எனும் பெயரை ஏற்றுப் பாதிரியாராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.

பிரான்சிஸ் கிங்ஸ்பரி
Francis Kiingsbury
பிறப்புஅழகசுந்தரம்
ஆகத்து 8, 1873(1873-08-08)
தண்டையார்பேட்டை, சென்னை
இறப்பு1941
பணிதமிழ்ப் பேராசிரியர்
பணியகம்இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு
சமயம்கிறித்தவம்
பெற்றோர்சி. வை. தாமோதரம்பிள்ளை
நாகமுத்து

வாழ்க்கைக் குறிப்பு

சென்னைக்கு சில மைல் தொலைவில் உள்ள தண்டையார்பேட்டை என்னும் புறநகரில் வசித்து வந்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. இவருக்கும் இவரது இரண்டாவது மனைவி நாகமுத்து என்பவருக்கும் பிறந்த ஐந்து பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தவரே அழகசுந்தரம். இவர் பிறந்தது 1873 ஆவணி 8-ஆம் நாள்.[2]

இயற்றிய நூல்கள்

இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார்.[3] அவற்றில் சில:

  • ஏசு வரலாறு
  • அகப்பொருட் குறள்
  • இராமன் கதை
  • பாண்டவர் கதை
  • சந்திரகாசம்
  • மனோன்மணி நாடகம் (1948, இலங்காபிமானி அச்சியந்திரசாலை, சாவகச்சேரி)
  • Hymns of the Tamil Saivite Saints (மறுபதிப்பு: Nabu Press, 2011)

மேற்கோள்கள்

  1. "அழகசுந்தர தேசிகர் இயற்றிய கவிதை". சாகித்திய மண்டல வெளியீடு - நூலகம் திட்டத்தில் பேணப்படுகிறது.. பார்த்த நாள் ஆகஸ்ட் 05, 2013.
  2. தேசிகர் நினைவு மலர் 1942, தொகுப்பு: கோவைவாணன், சாவகச்சேரி, சித்திரை 1942
  3. "அழகசுந்தரம் இயற்றிய நூல்கள்". கலைக்களஞ்சியம் (1) 1. (1954). தமிழ் வளர்ச்சிக் கழகம் - சென்னை. 237.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.