அல்த்தாய் மலைத்தொடர்கள்
அல்த்தாய் மலைத்தொடர்கள் (Altai Mountains or Altay Mountains) கிழக்கு நடு ஆசியாவில் உள்ள, கசக்ஸ்தான், ருசியா, சீனா மற்றும் மங்கோலியா நாடுகளை இணைக்கிறது. இம்மலைத் தொடர்களில் காட்டுன் ஆறு, லிர்டிஸ் ஆறு மற்றும் ஓப் ஆறு உற்பத்தியாகிறது. அல்த்தாய் மலைத்தொடரின் பெரும் பகுதிகள் மங்கோலியா மற்றும் ருசியா கொண்டுள்ளது. கசக்ஸ்தான் மற்றும் சீனாவும் சிறு பகுதிகளைக் கொண்டுள்ளது. அல்த்தாய் மலைத்தொடர்களில் அல்த்தாய் குடியரசு அமைந்துள்ளது.
அல்த்தாய் மலைத்தொடர்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||
அல்த்தாய் மலைத்தொடர்கள் | |||||||
சீனப் பெயர் | |||||||
சீன எழுத்துமுறை | 阿爾泰山脈 | ||||||
எளிய சீனம் | 阿尔泰山脉 | ||||||
| |||||||
Mongolian name | |||||||
Mongolian | Алтайн нуруу/Altain nuruu | ||||||
Russian name | |||||||
Russian | Алтай | ||||||
Romanization | அல்த்தாய் | ||||||
கசக்ஸ்தான் name | |||||||
கசக்ஸ்தான் | Алтай таулары |
பெயர்க் காரணம்
மங்கோலியா மொழியில் அல்-தாய் என்பதற்கு தங்க மலை என்று பொருள்படும். துருக்கிய மொழியில் அல் என்பதற்கு சிவப்பு என்றும், டாக் என்பதற்கு மலை என்றும் பொருள்படும். கசக்ஸ்தான், துருக்கி, மங்கோலியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பேசப்படும் அல்தாயிக் மொழிகள், இம்மலையின் பெயரால் அழைக்கப்படுகிறது.
நிலவியல்





இம்மலைத்தொடரின் வடக்கு பகுதியை செயிலுகேம் மலைகள் அல்லது கொல்லிவான் அல்த்தாய் என்றழைக்கப்படுகிறது.[1]
இம்மலைத் தொடரில் உல்ஸ் ஏரி , கையர்காஸ் ஏரி , தோர்கோன் ஏரி , கர் ஏரி போன்ற ஏரிகள் அமைந்துள்ளது. வடமேற்கு மலைத்தொடர்கள் மிகவும் சரிந்து, ஏறுவதற்கு கடினமாக உள்ளது. 4,440 மீட்டர் மற்றும் 4506 மீட்டர் உயரமும் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இரட்டை கொடுமுடிகள் உடைய பெலுகா பனி படர்ந்த கொடுமுடிகள், பல பனியாறுகளை உருவாக்குகிறது. இவ்விரட்டை கொடுமுடிகளை அல்த்தாய் மக்கள் கட்யின் பாசி (Kadyn Bazhy) என அழைப்பர்.[2] இம்மலைத் தொடரின் இரண்டாவது உயரமான கொடுமுடியான குயிட்டின் கொடுமுடி, மங்கோலியாப் பகுதியில் அமைந்துள்ளது. குயிட்டின் கொடுமுடி 4374 மீட்டர் உயரம் கொண்ட்து.
அல்த்தாய் மலைத்தொடரில் தென்மேற்கு பகுதியில் 600 முதல் 1,100 மீட்டர் உயரத்தில் உள்ள பல சிறிய துணை மேட்டு நிலங்களில், 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காதுன் மேட்டு நிலம் பல்லுயிர்களை கொண்டுள்ளது.
கொல்லிவான் ஏரியைக் கொண்ட சார்ஷ் மேட்டு நிலம் நன்கு பண்பட்ட நிலமாக உள்ளது. உபா ஆற்றின் மேற்கு சமவெளிகளான உல்பா மற்றும் புக்தர்மா சமவெளிகளில், மக்கள்தொகை அதிகமாக உள்ளது. வடமேற்கின் அல்த்தாய் மலைத்தொடரின், சீனாவின் புக்தர்மா சமவெளியில், 18ஆம் நூற்றாண்டில் இரசியத் திருச்சபையைச் சேர்ந்த இரசிய குடியானவர்கள் உருவாக்கிய அல்த்தாய் குடியரசு, 1869இல் சோவியத் ஒன்றியத்துடன் இணைத்தனர்.
- அல்த்தாய் மலைத்தொடரில் உள்ள உயரமான மலைகள்
- பெலுகா மலை (4,506 மீட்டர்), ருசியா
- குயிட்டன் கொடுமுடி (4,374 மீட்டர்), மங்கோலியா
- மாங்க் கயிர்கான் (4,204 மீட்டர்), மங்கோலியா
- சாம்பகரவ் (4,195 மீட்டர்), மங்கோலியா
- சுதை மலை (4,090 மீட்டர்), மங்கோலியா
- மார்காகோல் காப்புக் காடுகள், அல்டாய் மலை, கசக்ஸ்தான்
- அல்டாய் மலைத் தொடரில் பாயும் காட்டுன் ஆறு
- குசர்லா சமவெளி, அல்த்தாய் மலைத்தொடர்கள்
காட்டுயிர்கள்


அல்த்தாய் மலைகளில் வளரும் செடி, கொடிகளுக்கு ஏற்ப, பல்வேறு பட்ட காட்டுயிர்கள் காணப்படுகிறது. அவைகளில் முக்கியமான காட்டுயிர்கள், சைபீரியன் வரையாடுகள், அபூர்வ செம்மறியாடுகள், அல்த்தாய் மான்கள், காட்டுக் கலைமான்கள், சைபீரியன் கஸ்தூரி மான்கள், சைபீரிய கவரி மான்கள், கடமான்கள், காட்டுப் பன்றிகள், ஆசிய காட்டு நாய்கள், மங்கோலியன் சிறுமான்கள், பனிச் சிறுத்தைகள்,[3] The தியான் ஷான் செந்நாய்கள், காஸ்பியன் புலிகள் அடங்கும்.[4]
வரலாறு
33,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாய் போன்ற காட்டுயிர்கள் மட்டும் காணப்பட்ட[5][6][7] இப்பகுதியில், வெண்கலக் காலத்திலிருந்து, அல்த்தாய் மலைத்தொடர்களில் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களிலிருந்து மக்கள் குடியேறத் துவங்கினர்.
உலகப் பாரம்பரியக் களம்
ருசியாவின் சைபீரியா பகுதியில் அமைந்த அல்தாய் மலைத்தொடரில் 16,178 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரும் பகுதியில் அமைந்த அல்த்தாய் மற்றும் காதுன் இயற்கை காப்புக் காடுகள், டெலிஸ்கோயி ஏரி, பெலுகா கொடுமுடி, உகோக் பீடபூமி பகுதிகளை யுனேஸ்கோ நிறுவனம் இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஸ்டெப்பி புல்வெளிகளும், காட்டுப் புல்வெளிகளும், கலப்பு காடுகளில், பனிச் சிறுத்தைகள், சைபீரியா வரையாடுகள், அல்தாய் வெள்ளாடுகள் கொண்டுள்ளது.[8][9]
நிலநடுக்கம்
சைபீரியாவின் வடக்கு அல்டாய் மலைதொடர், நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளது. மலைத்தொடரின் சைபீரியா பகுதியான சுயா வடிநில நிலப்பகுதியில், 27 செப்டம்பர் 2003 அன்று 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இதனால் பெல்திர் கிராமம் முழுவதும் அழிந்ததுடன், 10.6 மில்லியன் டாலர் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டது.
அடிக்குறிப்புகள்
-
"Altai". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. - "Altai Republic :: official portal". Eng.altai-republic.ru (1999-06-30). பார்த்த நாள் 2012-08-13.
- Gerhard Klotz et al.: Hochgebirge der Erde und ihre Pflanzen und Tierwelt. Urania Verlag, Leipzig 1989, ISBN 3-332-00209-0.
- Vratislav Mazak: Der Tiger. Nachdruck der 3. Auflage von 1983. Westarp Wissenschaften, Hohenwarsleben 2004, ISBN 3-89432-759-6.
- Pritchard, Hamish (August 3, 2011). "Ancient dog skull unearthed in Siberia". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-14390679. பார்த்த நாள்: August 4, 2011.
- Ovodov, Nikolai D.; Crockford, Susan J.; Kuzmin, Yaroslav V.; Higham, Thomas F. G.; Hodgins, Gregory W. L.; Plicht, Johannes van der (July 28, 2011). "A 33,000-Year-Old Incipient Dog from the Altai Mountains of Siberia: Evidence of the Earliest Domestication Disrupted by the Last Glacial Maximum". PLoS ONE. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0022821. பார்த்த நாள்: August 4, 2011.
- Druzhkova, Anna S. (March 6, 2013). "Ancient DNA Analysis Affirms the Canid from Altai as a Primitive Dog". PLOS ONE.
- UNESCO's evaluation of Altai
- "Greater Altai – Altai Krai, Republic of Altai, Tyva (Tuva), and Novosibirsk – Crossroads". பார்த்த நாள் November 30, 2006.
மேற்கோள்கள்
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Altai". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் "Ancient spirit and might preserved by indigenous people of Altay." RT. November 6, 2011.
- Photos of Mountain Altai – Altai-Photo
- Altai-Project of the Technical University of Dresden – Institute of Cartography
- Golden Mountains of Altai at Natural Heritage Protection Fund
- UNESCO's evaluation of Altai (PDF file)