மாண்டரின் மொழி

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.[1]

அடிப்படை உரையாடல்கள்

  • நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்

நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்

  • சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்

சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்

மேற்கோள்கள்

  1. சுரா இயர்புக், 2012

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.