அல்ஃபா

அல்ஃபா (Alpha, கிரேக்கம்: άλφα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் முதலாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஒன்று என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான அல்விலிருந்தே () அல்ஃபா பெறப்பட்டது. அல்ஃபாவிலிருந்து பிறந்த எழுத்துகள் இலத்தீன் எழுத்து A, சிரில்லிய எழுத்து A என்பனவாகும்.

கிரேக்க நெடுங்கணக்கு
Ααஅல்ஃபா Ννநியூ
Ββபீற்றா Ξξஇக்சய்
Γγகாமா Οοஒமிக்ரோன்
Δδதெலுத்தா Ππபை
Εεஎச்சைலன் Ρρஉரோ
Ζζசீற்றா Σσςசிகுமா
Ηηஈற்றா Ττஉட்டோ
Θθதீற்றா Υυஉப்சிலோன்
Ιιஅயோற்றா Φφவை
Κκகாப்பா Χχகை
Λλஇலமிடா Ψψஇப்சை
Μμமியூ Ωωஒமேகா
அநாதையாய்
Ϝϝடிகாமா Ϟϟகோப்பா
Ϛϛசிடீகுமா Ϡϡசாம்பை
Ͱͱஹஈற்றா Ϸϸஉஷோ
Ϻϻசான்

ஆங்கிலத்தில் அல்ஃபா என்பது முதலாவது, தொடக்கம் என்பதற்கான ஒத்த சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[3]

பயன்பாடுகள்

கிரேக்கம்

பண்டைய கிரேக்கத்தில் அல்ஃபா என்பது குறிலாக இருக்கும்போது a என்றும் நெடிலாக இருக்கும்போது என்றும் உச்சரிக்கப்பட்டது.

ஆனாலும் நவீன கிரேக்கத்தில் குறில் அல்ஃபா மாத்திரமே பாவனையில் உள்ளது.

அறிவியல்

அறிவியலில் அல்ஃபாச் சிதைவு, அல்ஃபாத் துணிக்கை முதலியவற்றைக் குறிக்க அல்ஃபா பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு

அல்ஃபா எனும் எழுத்து எருது என்பதைக் குறிக்கும் பினீசிய எழுத்தான அல்விலிருந்து உருவானது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.